விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கரிய மேனிமிசை*  வெளிய நீறு சிறிதே இடும்,* 
    பெரிய கோலத் தடங்கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 
    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேற்கு,* 
    அரியது உண்டோ எனக்கு*  இன்று தொட்டும் இனி என்றுமே?    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரிய மேனி மிசை - (திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே
வெளிய நீறு - அஞ்சன நீற்றினை
சிறிதே இடும்; - அளவாக அணிகிற
பெரிய கோலம் - அளவிறந்த அழகினையுடைய
தடம் கண்ணன் - விசாலமான திருக்கண்களையுடையனாய்

விளக்க உரை

‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார். (கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்) இதற்குப் பலவகையாகப் பொருள் பணிப்பர்கள். மேலே “பெரிய கோலத்தடங்கண்ணன்” என்று திருக்கண்களின் ப்ரஸ்தா வமிருக்கையாலே கரிய மேனி மிசை என்றது. திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே என்றபடி. வெளிய நீறு சிறிதேயிடும்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி. “வெளியம்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி. “வெளியம்-அஞ்ஜனம்” என்று பன்னீராயிரம், வேதாந்த தேசிகன் தாத்பர்யரத்நாவளியில் இப்பாசுரத்திற்காக “கர்ப்பூரா லேபசோபே” என்றருளிச் செய்திருக்கக்காண்கையாலே, சாமளமான திருமேனி யிலே பச்சைக்கருப்பூர தாளியையணிந்து கொள்ளுகிற என்றும் பொருள் கொள்ளலாம். வெளிய என்றது வெள்ளிய என்றபடி. கரி அம்மேனிமிசை வெளிய, நீறு சிறிதேயிடும் என்று கொண்டு, கரி-குவலயாபீட யானையானது, அம்மேனிமிசை கண்ணபிரானது அந்தத் திருமேனியிலே, வெளிய-சீறிப் பாய்ந்தவளவிலே, சிறிதே-க்ஷ்ணகாலத்திற்குள், நீறு இடும்-அந்த யானையைப் பொடி படுத்தின-என்றானாம் ஒரு தமிழன்.

English Translation

Lord of the celestials, he wears a patch of white mud over his dark forenead, he has large beautiful lake-like eyes. I have praised him with fitting worlds, woven into a garland of poems. From now on and forever, is mere anything beyond my reach?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்