விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,*  அமரர்தம்- 
    ஏற்றை*  எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,* 
    மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி*  நாளும் மகிழ்வு எய்தினேன்,* 
    காற்றின் முன்னம் கடுகி*  வினை நோய்கள் கரியவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்ல வகை - விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை
காட்டும் - அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற
அம்மானை - சர்வேச்வரனாய்
அமரர் தம் ஏற்றை - நித்தியஸூரிநாதனாய்
எல்லாப் பொருளும் - எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே)

விளக்க உரை

எம்பெருமான் அடியார்களுக்குச் செய்தருள நினைக்கும் நன்மைகளை ஒருகாலே செய்து முடிப்பதில்லை; பொறுக்கப் பொறுக்கச் சிறிது சிறிதாகச் செய்தருள்வன். ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்திலுள்ள *புணர்தொறு மென்னக் கலந்துபிரிந்து * இத்யாதி சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்: அதன் கருத்தாவது-* பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந் நின்ற நீர்மையினி யாமுறாமையென்று பிரார்த்தித்தபோதே ஆழ்வாருடைய அபேக்ஷிதம் செய்துவிடாமலிருக்க இவரை இந்நிலத்திலே வைத்துத் தன்னுடைய ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஜ்ஞானபக்திகளை வளர்த்தது எதுக்காக வென்னில்; கனமான கர்ணபூஷணமிடுதற்கு இடமாம்படி நூலிட்டுத் திரியிட்டுக் குதம்பையிட்டுக் காது பெருக்குமாபோலவும், ஒருமாஸம் உபவாஸமிருந்தவர்களுக்கு முதலிலே போஜனமிட்டால் பொறாதென்று சோற்றையரைத்து உடம்பிலே பூசிப் பொரிக்கஞ்சி கொடுத்துப் பொரிக்கூழ் கொடுத்து நாளடைவிலே போஜனம் பொறுப்பிக்குமா போலவும், பகவதநுபவம் கனாக்கண்டறியாத விவர்க்கு அதிச்லாக்யமாய் நித்யஸூரிகள் அநுபவிக்கிற போகத்தை முதன் முதலிலே கொடுத்தால் ஸாத்மியா தென்று கருதி அது ஸாத்மிக்கைக்காக செய்வித்தபடி என்கை. ஆற்ற நல்லவகை இன்னாருக்குக் காட்டும் என்னாமையாலே இது பொதுவிலே சொன்னதித்தனை. ஆழ்வாரிடத்திலே ஸமந்வயம் காணலாம்.

English Translation

The Lord of celestials, my Lord, unfolds all meaning. He patiently discloses his good ways, and burns to dust all sickness and sin, like cinders before a wind, Singing his praise with woven worlds of poetry I have attained him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்