விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவி நின்று தொழுவார்*  வினை போக மேவும் பிரான்,* 
    தூவி அம் புள் உடையான்*  அடல் ஆழி அம்மான் தன்னை,
    நா இயலால் இசைமாலைகள் ஏத்தி*  நண்ணப் பெற்றேன்,* 
    ஆவி என் ஆவியை*  யான் அறியேன் செய்த ஆற்றையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேவி நின்று - நெஞ்சு பொருந்தியிருந்து
தொழுவார் - அனுபவிப்பாருடைய
வினை போக - பாபங்கள் யாவும் நசிக்கும்படி
மேவும் - தான் அவர்களோடே கலக்கின்ற
பிரான் - மஹோபகாரகனாய்

விளக்க உரை

நித்ய ஸூரிநாதனாயிருந்துவைத்து நித்ய ஸம்ஸாரியான என்பக்கலில் பண்ணியருளின மஹோபகாரதம் என்னே! என்று ஈடுபடுகிறார். எம்பெருமானுக்கு ப்ரணதார்த்திஹரன் என்று ஒரு திருநாமமுண்டு; அதன் பொருளை முதலடியில் அநுஸந்திக்கிறார். மேவி நின்று தொழுகையாவது தன்னையே விரும்பித் தொழுகை; ப்ரயோஜநாந்தரங்களுக்கு மடியேலாதே அநந்யப்ரயோஜநர்களாய்த் தொழுகை. “நம்பும் மேவும் நசையாகும்மே” என்கிறபடியே மேவுதலாவது ஆசைப்படுகை; தன்னையே ஆசைப்பட்டு என்றபடி. ப்ரயோஜநாந்தரங்களை ஆசைபட்டுக் தொழுவாருடைய வினைகளைப் போக்கமாட்டானோ? என்று கேட்கவேண்டா. துர்வி அம் புள்ளுடையான் -துர்வியென்று சிறகுக்குப்பெயர்; கருத்மானுக்குச் சிறகிருக்கின்றமையை இவர் எடுத்துரைக்க வேணுமோ? வேண்டர் ஆயினும் உரைப்பது அநுபவராஸிக்யத்தாலேயாகும். “பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ள வோர்க்கும் கிடந்தென் செவிகளே” என்று கீழே அருளிச் செய்தாரே, ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பெரிய திருவடியின் சிறகே உறைந்திருக்கும் போலும். அம்புள் -அழகிய புள்; என்ன அழகு என்னில்; *** த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபிநா.” என்று ஆளவந்தார் அருளிச்செய்தபடியே எம்பெருமானுடைய திருவடி பட்டுப் பட்டுத் தழும்பேறின அழகு.

English Translation

He rides the Garuda with beautiful wings and bears a powerful discus. My Lord loves and cares for devotees who stand and worship him. I have sung his praise with my tongue and attained him. I do not understand the way the spirit moves my soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்