விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,* 
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,*
    வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி*  மேவப்பெற்றேன்,* 
    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்தனன் மேவியே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீவு இல் இன்பம் - அழிவில்லாத ஆனந்தமானது
மிக எல்லை நிகழ்ந்த - மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே)
நம் அச்சுதன் - அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய்
வீவு இல் சீரன் - முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய்
மலர்கண்ணன் - தாமரை மலர்போன்ற கண்களையடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை - விண்ணோர்க்குத் தலைவனானவனை

விளக்க உரை

திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார். முதலடி ஆனந்தவல்லியை யடியொற்றி அருளிச்செய்தததென்று ஆசாரியர்கள் திருவுள்ளம்பற்றுகிறார்கள். ஆனந்தவல்லியையாவது தைத்திரியோப நிஷத்தில் ஒரு பகுதி. அது எம்பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆனந்த குணத்தைப்பற்றிப் பேசுகின்றது. அந்த ஆனந்தம் இவ்வளவு கொண்டதென்று சொல்ல முடியாதென்பதைப் காட்டுவதற்கு அங்கு ஒருவகையான கல்பநை செய்யப்பட்டிருக்கின்றது. (அதாவது-) ஒரு மநுஷ்யன்; அவன் நல்ல யௌவந பருவத்திலுள்ளவன்; ஸகல சாஸ்திரங்களையும் ஒன்று விடாமல் ஓதிப் பிறர்களுக்கும் ஓதுவிப்பவன். ஆலஸய்மின்றி எல்லாக் காரியங்களையும் வழுவாமற் செய்பவன்; தேஹத்திலும் மனத்திலும் திடமுள்ளவன்; இவ்வளவும் வாய்ந்தாலும் தரித்ரனாயிருந்தால் பயனில்லையே. அப்படியின்றிச் செல்வமெல்லாம் நிறைந்த பூமண்டலம் முழுவதையும் செங்கோல் செலுத்தி ஆளும்படியான ஒப்புயவர்வற்ற ஸமபத்தும் வாய்ந்தவன். இப்படிப்பட்ட அதிசயங்கள் நிறைந்த ஒரு மநுஷ்யனிருந்தால் அவனுக்கு உண்டாகக்கூடிய ஆனந்தத்தை முன்னே எடுத்துக்காட்டி, அதைவிட நூறு பங்கு அதிகமான ஆனந்த முடையவர்களாக மநுஷ்ய கந்தர்வர்கள் என்ற வகுப்பைக்கூறி அவர்களைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையவர்களாக தேவகந்தவர்களைக் கூறி இப்படியே நூறுநூறுபங்கு அதிகமான ஆனந்த முள்ளவர்களாக வரிசையாய் சிரலோகலோகபித்ருக்களையும், ஆஜாநஜ தேவர்களையும், தேவர்களையும் இந்திரனையும் ப்ருஹஸ்பதியையும் பிராஜாபதியையும் சொல்லிவந்து, அந்த பிராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையது பரப்ரஹ்மம் என்று சொல்லிப்பார்த்து, ‘ப்ரப்ரஹ்மத்தின் ஆனந்தத்தை இவ்வளவு மட்டமாகவா சொல்லிவிடுகிறது’ என்று குறைப்பட்டு என்றபடி மறுபடியும் திரும்புகிறதாம்; அதாவது கீழ்ச் சொல்லிக் கொண்டுவந்த ப்ரக்ரியையில் கடைசியாக யாதெர்ரு ப்ரஜாபதி சொல்லப்பட்டானோ, அவனை அடுத்த பர்யாயத்தில் மநுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்தி அவன் முதலாக ப்ரஜாபதி யளவும் சொல்லிக்கொண்டுபோய், அந்த ப்ராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தம் பரப்ஹமத்தினுடையது என்று சொல்லி முடிக்கப்பார்த்து அதுவும் கூடாமையாலே முன்போலே ஒரு பர்யாயம் சொல்லுவது-இப்படியே அந்தாதியாக இன்றைக்கும் புந: புநராவ்ருத்தியிலே கிடக்கின்றானாம் வேத புருஷன்.

English Translation

Our Achyuta, -Lord of celestials, flower-eyed Lord, bearer of the highest good, -resides in the farthest limits of eternal joy. I have attained him through songs. praising him without end I too am in the farthest limits of eternal joy

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்