விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி*  அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,* 
    வியர்க்கும் மழைக்கண் துளும்ப*  வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,* 
     
    பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,*  பெருமானே! வா! என்று கூவும்,* 
    மயல் பெருங் காதல் என் பேதைக்கு*  என்செய்கேன் வல்வினையேனே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகல நீள் நோக்கு கொள்ளும் - பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே)
வியர்க்கும் - வேர்த்து நீராக நிற்கும்
மழை கண் துளும்ப -மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி
வெம் - வெவ்விதாக
உயிர்க்கொள்ளும் -நெடுமூச்செறிகின்றள்

விளக்க உரை

பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய். அயர்க்கும் = சிலகாலங்களிலே அறிவழிந்து கிடக்கின்றள். சுற்றும் பற்றி நோக்கும் -சில காலங்களிலே அறிவு குடிபுகுந்திருந்து தனக்குக் காட்சி தருவதற்காக எம்பெருமான் அருகே வந்திருந்தானாகக் கொண்டு மிக்க ஆவலுடனே சுற்றும் நோக்குகின்றான்;.அகலவே நீள் நோக்குக் கோள்ளும்-சுற்றும் பார்த்தும் காணாதொழிந்தவாறே பரமபதத்தில் நின்றும் இப்போதே புறப்பட்டிருக்கக் கூடும் அங்கிருந்து எழந்தருளுகிற அழகைக் காண்போம்” என்று நெடுந்துர்ரத்திரே கண்ணைவிட்டுப் பாராநின்றாள். வியர்க்கும்= அங்குங் காணப் பெறாமையாலே இளைப்பாலே வியர்வை மிகும். (மழைக்கண் இத்யாதி.) வேர்வையாய்ப் புறப்பட்டதுபோக மிகுந்தது கண்ணீராய்ப் புறப்படும்; அதிலும் மிகுந்தது நெடு மூச்சாய்ப் புறப்படும். அந்த பரிதாபத்தாரே சரீரம் தரிக்கமாட்டாமல் சோரும்; பின்னையும் ஆசை பேசாதிருக்கவொட்டாமையாலே, பெண்களுக்கு அற்றுத் தீர்ந்த க்ருஷ்ணனே! என்று கூவுகிறாள். அங்ஙனம் கூவினவாறே உருவெளிப்பாட்டாலே அவன்றான்வந்து தோன்றினனாகக் கொண்டு ‘பெருமானே! வா’ என்று அன்புதோற்ற அழைக்கின்றாள்.

English Translation

She swoons, and stares blankly into the distance, and sweats, Tears fall like rain; she sighs hotly and weakly calls "Krishna!", and "Come, my Lord!", woe is me, what shall I do? Alas, my daughter is smitten by a maddening love-sickness

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்