விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விரும்பிப் பகவரைக் காணில்*  'வியல் இடம் உண்டானே!' என்னும்,* 
    கரும் பெரு மேகங்கள் காணில்*  'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
    பெரும் புல ஆ நிரை காணில்*  'பிரான் உளன்' என்று பின் செல்லும்,* 
    அரும் பெறல் பெண்ணினை மாயோன்*  அலற்றி அயர்ப்பிக்கின்றானே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பகவரை - ஸந்நியாஸிகளை
காணில் - கண்டால்
விரும்பி - ஆதரவு கொண்டு பேணி
வியல் இடம் உண்டானே என்னும் - அகன்ற உலகத்தை ப்ரளயாபத்திலே உண்டு திருவயிற்றிலே வைத்து ரகூஷித்த ஸர்வரக்ஷகனே என்பாள்;
கரு பெரு மேகங்கள் காணில் - கறுத்துப்பெருத்த மேகங்களைக் கண்டால்

விளக்க உரை

பகவர் என்றது பாமைகாந்திகள் என்றபடி. ஜ்ஞானானுஷ்டநன பரிபூர்ணர்களான உத்தமாச்ரமிகள் என்று கொள்க. பகவானைச் சொல்லுகிற சொல்லையிட்டே அவர்களைக் கூறினது-அவர்கள் பகவானில் வேறுபடாதவர்கள் என்பதைக் காட்டுதற்கென்க. அப்படிப்பட்டவர்களைக் கண்டால், உலகங்களையெல்லாம திருவயிற்றிலே வைத்து நோக்கின பெருமானாகவே பிரதிபத்தி பண்ணுவள். ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்கிற பகவத்கீதையிலே நோக்குப்போலும். கரும்பெரு மேகங்கள் காணில் = கறுத்துப் பெருத்து விடாய்தீர்க்குமதான மேகத்தைக் கண்டவாறே அப்படிப்பட்ட வடிவையுடையனான கண்ணபிரான் தானே வந்து தோன்றினனாகக்கொண்டு கோலாஹலங்கள் செய்யா நிற்பள். இங்கே ஒரு இதிஹாஸம் ஈட்டில் அருளிச்செய்யப்படுகிறது:-ராஜேந்த்ரசோழன் என்னும் ஊரில் திருவாய்க்குலத்தாழ்வார் என்று ஒருவரிருந்தாராம்; அவர் கார்காலத்திலே பயிர் பார்க்கவென்று புறப்பட்டு வயலருகில் சென்றவாறே மேகத்தைக் கண்டு மோஹித்து விழுந்தாராம்; இவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடிவந்து அவரை யெடுத்துக்கொண்டு வந்து க்ருஹத்திலேவிட்டு ‘இவருடைய ப்ரக்ருதியை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்படவிடலாமோ? என்றானாம். மேகத்தைக் கண்டு பகவானாவே யெண்ணி மோஹித்த விழுதல்; பக்தர்களுக்கு உள்ளதென்று இதனால் விளங்கிற்று.

English Translation

Seeing saintly men she says eagerly, "Lord who swallowed the Universe!" Seeing dark laden clouds she calls, "Krishna!" and tries to fly, seeing herds of cattle, she says, "The Lord is among them!" and follows. My hard-begotten daughter is afflicted to tears by the Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்