விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோமள வான் கன்றைப் புல்கி*  கோவிந்தன் மேய்த்தன' என்னும்,* 
    போம் இள நாகத்தின் பின்போய்*  அவன் கிடக்கை ஈது என்னும்,*
    ஆம் அளவு ஒன்றும் அறியேன்*  அருவினையாட்டியேன் பெற்ற,* 
    கோமள வல்லியை மாயோன்*  மால் செய்து செய்கின்ற கூத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோமளம் வான் கன்றை புல்கி - இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை)
கோவிந்தன் மேய்த்தன என்னும் - பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்;
போம் இளம் நாகத்தின் பின் போய் - இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று
அவன் கிடக்கை - அவன் பள்ளிகொள்ளும் படுக்கை
ஈது என்னும் - இது என்று சொல்லுவாள்;

விளக்க உரை

இங்கு ‘ஆன் கன்றை’ என்றும் ‘வான் கன்றை’ என்றும் பிரியும். “ஆண் கன்றை என்று பாடமாகவுமாம்” என்று பன்னீராயிரத்திலுள்ளது. பசுக்களை மேய்ப்பதிற் காட்டிலும் கன்றுகளை மேய்ப்பதில் கண்ணபிரானுக்கு மிக்க ஆவலுண்டு; “திவத்திலும் பசு நிரைமேய்ப்பு உவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவே” என்று பசுக்கூட்டங்களை மேய்ப்பதில் வெறும் உவப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டது; “கன்று மேய்த்து இனிது உகந்தகாளாய்” என்று கன்றுகளை மேய்ப்பதில் இனிதுவப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டது. பிறர்கை பார்த்திருக்கும் அசக்தர்களை ரகூஷிப்பதிலேயே ஊக்கமுடையவன்; எம்பெருமான் என்பது உள்ளுறை பொருள். கண்ணபிரான் கன்றுகளை மேய்த்தர னென்பதறிந்த பராங்குச நாயகி, தெருவில் திரியும் கன்றுகளைப்பிடித்து அணைத்துக்கொண்டு ‘நம் கண்ணபிரான் மேய்த்த கன்றுதான் இவை’ என்கின்றாள். இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி:-“கன்றின் கழுத்தைக் கட்டிக்கொண்டவாறே அது துள்ளிப்போகா நிற்குமே; அவன் பரிகரமாயே யிருந்ததென்னும்” என்பதாம். “காற்றில் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமுந்தாரான்” என்கிறபடியே கைக்கு எட்டாமல் ஓடுகிற தன்மை கண்ணபிரானுக்குப்போலவே கன்றுக்கும் கண்டதனால் “கோவிந்தனுடைய பரிகரமே இவை” என்று திண்ணமாகச் சொல்லுவளென்படி. கோமளவென்று இளமைக்கும் மென்மைக்கும் பெயர்; மாணிக்கத்தில் ஒருவகைக்கும் பெயர். ஆன்கன்று என்றால் -பசு ஈன்றகன்று என்றபடி. வான்கன்று என்றால்-திவ்யமான கன்று என்றபடி. கோவிந்தன்-பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்த பெருமேன்மைக்க முடிசூடினவன்.

English Translation

She hugs a tender chubby calf and says, "Govinda has grazed these!", She goes after a young snake and says, "There goes Govinda's Couch!", Woe is me, -I know not where this will end, -the spell that the Lord has cast on my tender daughter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்