விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறியும் செந்தீயைத் தழுவி*  'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,* 
    எறியும்தண் காற்றைத் தழுவி*  'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
    வெறிகொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
    செறிவளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வினையுடை யாட்டியேன் பெற்ற - கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்- நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும் - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி - சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும் - ‘எம்பெருமான்’ என்கிறாள்;

விளக்க உரை

மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள். எம்பெருமானுடைய திருவடிவைச் சொல்லுமிடங்களில் “தேஜஸாம் ராசிம் ஊர்ஜிதம்” என்றும் “குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு” என்றும் தேஜபுஞ்ஜமாகவே சொல்லுவர்கள். ப்ரதிபத்தி பண்ணித்தழுவுகின்றாள்; அந்த ப்ரதிபத்தியின் சுத்தியாலே, மெய்வேவாள் -உடம்பில் தாஹமுண்டாவது கிடையாது. அக்னிதேவதை தன் காரியத்தைச் செய்யாதிருக்கமோவென்னில், ப்ரஹ்லார்தாழ்வானுக்குச்; செய்தாலன்றோ பராங்குசநாயகிக்குச் செய்வது. “தாதைஷ வஹ்நி: பவநோரிதோபி ந மாம் தஹதி அத்ர ஸமந்ததோஹம். பச்யாமி பத்மாஸ்;தரணாஸ்த்ருதாநி சீதாநி ஸர்வாணி திசாம் முகாநி.” என்றாளிறே ப்ரஹ்லாதாழ்வான். என்னை நெருப்புச் சுடுகின்றதில்லையே யென்றான்; அதுபோலேயாயிற்று இதுவும். எறியுங் தன்காற்றைத் தழுவி யென்னுடைக் கோவிந்தனென்னும் = வீசுகிற குளிர்ந்த காற்றை, பசுமேயத்துவிட்டுத் தன்னோடே கலக்க வருகிற க்ருஷ்ணனாகக் கொண்டு தழுவி பிரிதியுள்ளடங்காமையாலே என்னுடைய கோவிந்தன் என்கிறாள்.

English Translation

She fondles the known red fire unhurt and says, "This is Achyuta!" She fondles the blowing cold wind and says, "Here comes Govinda!" Woe is me, -she smells strongly of Tulasi flowers, -the things my bangled fawn does these days!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்