விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெய்வளைக் கைகளைக் கூப்பி*  'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,* 
    செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,*  'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,* 
    நையும் கண்ணீர் மல்க நின்று*  'நாரணன்' என்னும் அன்னே,*  என் 
    தெய்வ உருவில் சிறுமான்*  செய்கின்றது ஒன்று அறியேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெய்  வளை கைகளை - (பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை
கூப்பி - குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து)
பிரான் - உபகார சீலனான எம்பெருமான்
கிடக்கும் - (எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற
கடல் என்னும் - கடல் (இது) என்று சொல்லுவது;

விளக்க உரை

என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவையுடையளாய் மான்போல் இளையபருவத்தையுடையளான இவள் செய்கின்றது ஒன்று அறியேன் -செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன். எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய கடலையும் ஸூர்யனையுங்கண்டு பராங்குசநாயகி சொல்லுமவற்றைத் திருத்தாயார் கூறுகின்றார். திவ்யமான வடிவுபடைத்தவிவள் செய்வதொன்றும் எனக்கு இன்னதென்று தெரிகின்றதில்லை யென்கிறார். பெய்வளைக் கைகளைக்கூப்பி-இப்போது ஆழ்வார்க்கு விச்லேஷதசையன்றோ செல்லுகின்றது; இப்பிரிவு நிலையில் கையில்வளைகள் கழன்றனவாகப் பேசுகையன்றோ முறைமை; பெய்வளைக் கைகளென்னலாமோ? என்று சங்கை தோன்றும்; இந்த சங்கையை நம்பிள்ளை திருவுள்ளத்திற்கொண்டு ஸமாதானமாக அருளிச்செய்கிறார்- “கடல் வண்ணன் என்றவாறே, கழன்ற வளைகளொழியச் சரிந்தவளைகள் பூரித்தனகாணும்’ என்று இவ்விடத்தில் ஒரு சுலோகம் நினைக்கத்தக்கதுண்டு; அதாவது *** யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணெந தந்வங்க்யா: களிதாநிட புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தளிதாநி.” என்பதாம். (இதன் கருத்து.) கையில் பலவளைகளை அணிந்து கொண்டிருந்த நாயகியோடு நாயகன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனை நோக்கி யாமி என்றான்; வெளியூருக்குப் போவதாக இருக்கிறேன் என்றபடி. இங்ஙனே பிரிவை பிரஸங்கித்தவாறே அக்காதலி பிரிவு வந்திட்டாகவே கருதி அப்போதே மேனி காதலன் அவளுடைய பிரிவாற்றாமையக் கண்டு நொந்து, தான் பிரிந்து செல்வது தகாதென்று துணிந்து நயாமி என்றான்; இதை இரண்டு சொற்களாகக் கொண்டால் ‘நான் பிரிந்து போவேனல்லேன்’ என்று பொருளாகும்; ஒரே சொல்லாகக் கொண்டால் ‘உன்னையும் உடனழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று பொருளாகும். இங்கே ஏகப்ரயயோகத்திலே அந்த க்ஷணத்திலேயே பிரிவாற்றாமைத்துயர் தொலையப்பெற்று உடல் பூரிக்கப்பெற்றதனால் முன் க்ஷணத்திலே கழன்றொழிந்த வளைகள்போக சேஷித்தவை (உடல் பூரிப்பாலே) படீலென்று வெடித்து விழுந்ததொழிந்தனவாம். இந்த ரிதியில் விச்லேஷ தசையில் இருக்கினற பராங்குச நாயகிக்குக் கையில்வளை பெய்யப்பெற்றிருத்தல் கூடுமோ? என்று சங்கை; விச்லேஷ தசையா யிருக்கச்செய்தேயும் (கீழப்பாட்டில்) கடல்வண்ணனென்று தலைவனது திருநாமத்தை உச்சரிக்கப்பெற்ற உவப்பினால் சிலவலைகள் கையில் தங்கியிருந்தன வென்று சங்காபரிஹாரம் செய்ததாயிற்று.

English Translation

She folds her bangled hands and says, "The Lord sleeps in the ocean!" She points to the red Sun and says, "That is Sridhara's icon-form" With tears welling, she swoons, then only says, "Narayana!" Ladies! I can scarcely understand the things my godly fawn does

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்