விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரைக்க வல்லேன் அல்லேன்*  உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்* 
    கரைக்கண் என்று செல்வன் நான்?*  காதல் மையல் ஏறினேன்,*
    புரைப்பு இலாத பரம்பரனே!*  பொய் இலாத பரஞ்சுடரே,* 
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த*  யானும் ஏத்தினேன்.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புரைப்பு இலாத பரம்பரனே - புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே!
பொய் இலாத - (என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத
பரம் சுடரே - பரஞ்சோதிப் பெருமானே!
உரைக்க வல்லேன் அல்லேன்-  நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்;
உலப்பு இல் - முடிவில்லாத

விளக்க உரை

எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார். உரைக்கவல்லேனல்லேன்-உன்னுடைய பிரணயித்வ குணத்தை அநுபவித்தநுபவித்து உள்ள முருகுவே னத்தனையொழிய இன்னபடி யென்று பேசவல்லேனல்லேன் என்றபடி. முழுதும் பேச முடியாமற்போனாலும் பேசலாமளவு பேசினாலொவென்ன, உன் உலப்பில் கீர்த்திவெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான் என்கிறார்; உன்னுடைய ப்ரணயித்வ குணஸமுத்ரத்தின் கரையிலேதான்; என்னால் அடியிடமுடியுமோ? என்கை. கடலினுள்ளே இறங்கமுடியா முடியாதா என்கிற விசாரம் ஒருபுறமிருக்கட்டும்; கடற்கரைதன்னில் சென்று நிற்கவும் ப்ரஸக்தியில்லையே என்கிற இச்சொல்லழகு சாலவும் ரஸிக்கத்தக்கது. இங்ஙனே கரையருகும் சொல்லப்போகாத விஷயத்தில் நீர் ஏதோபேசிக்கொண்டிருக்கிறீரே, இஃது என்ன? என்று எம்பெருமான் கேட்டனனாகக்கொண்டு காதல் மையலேறினேன் என்கிறார். ப்ரேமத்தாலே கலங்கினேன்; கலங்கினவர்களின் செயலுக்கு ஓர் அடைவுமுண்டோ என்றவாறு. ஆழ்வீர்! உம்முடைய சொற்களை நோக்குமிடத்து, நீர் என்னுடைய குணக்கடலைக் கரைகண்டவராகத் தோற்றுகின்றீர்; இல்லையாகில் பெரிய பெரிய துதிமொழிகளைப் பேசப் புறப்பட்டிருக்கமாட்டீலே யென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினதாகக்கொண்டு, இரைத்து நல்ல மேன்மக்களேமத்த யானுமேத்தினேன் என்கிறார்.

English Translation

I am not fit to describe your infinite glory-flood. When will I reach its banks? Alas, I swoon with love. O Lord of faultless effulgence, you are indifferent to me. Great and good celestials stand and sing your praise; I too sang

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்