விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரைகழல்கள் நீட்டி*  மண் கொண்ட கோல வாமனா,* 
    குரை கழல் கைகூப்புவார்கள்*  கூட நின்ற மாயனே,* 
    விரை கொள் பூவும் நீரும்கொண்டு*  ஏத்தமாட்டேனேலும்,*  உன் 
    உரை கொள் சோதித் திரு உருவம்*  என்னது ஆவி மேலதே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குரை கழல்கள் நீட்டி - (வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி
மண் கொண்ட - ஜகத்தை அளந்து கொண்ட
கோலம் வாமனா - வடிவழகிய வாமன மூர்த்தியே!
குரை கழல் - அத்திருவடிகளைக் குறித்து
கை கூப்புவார்கள் - ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள்

விளக்க உரை

நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமைகொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார். “குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட” என்ற இவ்விடத்து ஒரு சங்கையுண்டாகும்; பகவான் மாவலியிடத்து நீரேற்றுப் பெற்றபின்பு ஒரு திருவடியினால் மண்ணுலகத்தையும் மற்றொரு திருவடியினால் விண்ணுலகத்தையும் அளந்தருளினதாகவன்றோ வரலாறு; இங்கு ‘மண் கொண்ட’ என்றதற்குச் சேர ‘குரைகழல் நீட்டி’ என்று ஒருமையாக இருக்கவன்றோ தகுவது; ‘குரைகழல்கள்’ என்று பன்மையாக இருக்கத் தகுதியில்லையே; “மண்ணும் விண்ணுங் கொண்ட” என்றிருந்தாலன்றோ ‘கழல்கள் நீட்டி’ என்ற பன்மை பொருந்தும்-என்பதாக. இதற்கு இரண்டுவகையாகப் பரிஹாரம் கூறலாம்; “பூஜாயாம் பஹூவசநம்” என்ற வட நூலாரின் முறை தமிழர்க்கும் உடன்பாடேயாதலால் ஒரு திருவடியையே பன்மையாகக் கூறினது உபசாரம்பற்றி என்னலாம்; அன்றி, மண் என்றது பொதுப்பட உலகத்துக்கு வாசகம் என்றுகொண்டு, கீழுலகங்களையும் மேலுகங்களையும் அளந்துகொண்ட என்றதாகக்கொள்ளலாம். மண் என்றது விண்ணுக்கும் உபலக்ஷணம் என்னலாமாயினும் இந்த ஸமாதானம் பஹூவசந நிர்வாஹகமாகாது. மற்றும் எல்லார் வாய்க் கேட்டுணர்க.

English Translation

O Lovely Manikin! You extended your tinkling feet and took the Earth. O Lord who gives refuge to those who come with folded hands! I do not worship you with fragrant flowers and water. Yet your mysterious radiance stands guard over my soul

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்