விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோளி சேர் பின்னை பொருட்டு*  எருது ஏழ் தழீஇக் 
    கோளியார்*  கோவலனார்*  குடக் கூத்தனார்,* 
    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    நாளும்நாள்,*  நைகின்றதால்*  என்தன் மாதரே       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் தன் மாதர் - எனது பெண்பிள்ளை
தோளி - அழகிய தோள்களையுடையவளும்
சேர் - அநுரூபையுமான
பின்னை பொருட்டு - நப்பின்னைப் பிராட்டிக்காக
எழ் எருது - ஏழு எருதுகளையும்

விளக்க உரை

நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள். தோளி என்பதும் சேர் பின்னைக்குத் தனித்தனி விசேஷணங்கள். அழகிய தோள்களையுடையவளும் தனக்குத்தகுந்திருப்பவளான நப்பின்னையென்றபடி. “தழீஇக்கோளியார்”; என்றவிது ஒரு முழுச் சொல்லு: கழுவிக்கொண்வடர் என்று பொருள். இதனை இரண்டு சொல்லாக மயங்கி ‘எருதேழ்தழி’ என்று நிறுத்தி, ‘கோளியார் கோவலனார்’ என்று பாடஞ்செய்து வருவது பாங்கன்று. ‘எருதுகளை முடித்தவர்’ என்னவேண்டுமிடத்துத் தழுவினர் என்றது மங்கல வழக்கு. இப்படிப்பட்ட கண்ணபிரானுடைய திருவடிகளிற் சாத்தின திருத்துழாயையாயிற்று இவள் ஆசைப்பட்டது. மாதர்-அழகு; அழகுடையவள்.

English Translation

My pretty daughter weakens day by day, thinking of the cool Tulasi garland on the feet of the Lord, -the cowherd-prince who danced with pots killed seven bulls for Nappinnai's hand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்