விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோது இல வண்புகழ்*  கொண்டு சமயிகள்,* 
    பேதங்கள் சொல்லிப்*  பிதற்றும் பிரான்பரன்,*
    பாதங்கள் மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  ஊழ்வினையேன்*  தடந் தோளியே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊழ்வினையேன் - பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது
தட தோளி - பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை
சமயிகள் - சமயவாதிகள்
கோது இல - குற்றமற்ற
வண் புகழ் கொண்டு - விலக்ஷணமான குணங்களைக் கொண்டு
பேதங்கள் சொல்லி - தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி

விளக்க உரை

திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். முன்னிரண்டடிகள் பரமபதநாதனை வருணிப்பன. எம்பெருமானது திருக்குணங்களிலே புகுந்துவிட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லை காண வொண்ணாததாயிருக்கும்; ப்ரவதத்திற்கு ஈடான குணங்களும் ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள யெடுத்துரைத்துக் கொண்டாட, இங்ஙனே வாதவிவாத கலஹங்கள் ஏற்பட்டுவிடும்; இத்தகைய குணாநுபவ விவாதமேயாய்ச் செல்லுமாம். பரமபதத்தி;ன் “பிணங்கியமார் பிதற்றுங் குணங்கெழு கொள்கையினானே” என்று (1-6-4) கீழேயுமருளிச் செய்யப்பட்டது.

English Translation

My sinful daughter with long arms prates only of the golden Tulasi garland on the radiant feet of the Lord, -who is praised by raving philosophers

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்