விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி*  எல்லாம்விட்ட,* 
    இறுகல் இறப்பு என்னும்*  ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,* 
    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்*  பின்னும் வீடு இல்லை,* 
    மறுகல் இல் ஈசனைப் பற்றி*  விடாவிடில் வீடு அஃதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறுக - பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி
உணர்வத் தொடு - ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு
மிக நோக்கி - நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி)
எல்லாம் விட்ட - (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும்வெறுத்தவனாய்
இறுகல் இறப்பு என்னும் - ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார். “மிகவுணர்வத்தொடு எல்லாம் குறுகநோக்கிவிட்ட இறுகலிறப்பென்னுந் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்” என்றும் அந்வயிப்பது. சிறந்த ஞானத்தை யுடையனாய்க்கொண்டு ப்ராக்ருத போகங்களெல்லாவற்றையும் அற்பங்களாகக்கண்டு அவற்றில் ஆசையைவிட்ட-என்பது முதலடியின் கருத்து. மற்றொரு வகையாகவுமுரைக்கலாம்-குறுக-மனம் கண்ட விஷயங்களிலும் பரந்துசெல்லாதபடி அதனக்குறுக்கி; ஜிதேந்ரியனாகி என்றவாறு. உணர்வதொடு-ஜ்ஞாந்ஸ்வரூபனான ஆத்மாவோடேஇ மிகநோக்கி-நன்றாக ப்ரவணமாக்கி: எல்லாம்விட்ட-பகவத் ப்ராப்தியுமுட்பட எல்லாவற்றையும் வெறுத்த என்றபடி. ஆத்மாநுபவமொன்றுதவிர மற்ற எந்த புருஷார்த்தத்தையும் கணிசியாத-என்றதாயிற்று. இறுகலிப்பு-இறப்பு என்பது இங்கே மோக்ஷத்தைச் சொல்லுகிறது. இறுகல்-ஸங்கோசம்; பவதநுபவமாகிற மோக்ஷமானது விகாஸ மோக்ஷமென்றும், ஆத்மாநுப்வமாகிற மோக்ஷமானது ஸங்கோச மோக்ஷமென்றும் கொள்ளக்கடவது. ஸ்வரூபாநுரூபமான பகவர் கைங்கர்யங்களெல்லாம் நன்றாகச்செய்வதற்கு உறுப்பான மோக்ஷம் விகாலமோக்ஷம். ஆத்மா நுபமோக்ஷத்தில் இந்த விகாஸத்திற்கு அவகாசமில்லையன்றோ. “ஜராமரணமோக்ஷய” என்கிறபடியே மறுபடியும் பிறப்பதும் இறப்பது கிடையாது என்கிற இவ்வளவே பயனாதலால் இது ஸங்கோச மோக்ஷமெனத் தகுதியுடையதென்று திருவுள்ளம்பற்றிய ஆழ்வார் இறுகலிறப்பு என்று வெகு அழகாக அருளிச்செய்தார்.

English Translation

Seers who contemplate on consciousness, giving up all else, do attain the heaven of Atman, But memory remains, and drags them back to passions, and then there is no liberation, Hold on to the feet of the deathless Lord, for that alone is liberation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்