விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து*  ஐம்புலன் வென்று,* 
    செடி மன்னு காயம் செற்றார்களும்*  ஆங்கு அவனை இல்லார்,* 
    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    கொடி மன்னு புள் உடை*  அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படி மன்னு - பரம்பரையாய் வருகின்ற
பல் கலன் - பலபல ஆபரணங்களையும்
பற்றோடு அறுத்து - ஸவாஸநமாகவிட்டவர்களாய்
ஐம்புலன் - பஞ்சேந்திரியங்களையும்
வென்று - வசப்படுத்தினவர்களாய்

விளக்க உரை

கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார். படிமன்னு பல்கலன் பற்றோடறுப்பதாவது-குல பரம்பரையாகத் தங்களுக்குக் கிடைத்த ஆபரணம் முதலிய சிறப்புக்களை அடியோடு துறப்பதாம். ஸ்வர்க்கலோகத்தில் அளவிறந்த போகங்களை அனுபவிக்கப்பெறவேணுமென்னும் நசையால் இஹலோகபோகங்களை வெறுக்கிறபடி, “ஊன்வாடவுண்ணாது உயிர்க்காவலிட்டு உடலிற் பிரியாப்புலனைந்தும் நொந்து தான் வாட வாடத் தவம்செய்ய” என்றும். “காயோட நீடுகனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடுநின்று தவஞ்செய்ய” என்றும், “வீழ்கனியு மூழிலையும் என்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தித் தன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும், செஞ்சுடரோன் மன்னு மழல்நுகர்ந்தும் வெண்தடத்தினுட்கிடந்தும்” என்றும். “காயிலைதின்றுங் கானிலுறைந்துங்கதிதேடித் தீயிடைநின்றும் பூவலம் வந்தும்” என்றுஞ் சொல்லுகிறபடியேயிருந்து கடுந்தவம் புரிகின்றவர்கள் படிமன்னுபல்கலன் பற்றோடறுத்தவர்களாயும் ஐம்புலன் வென்றவர்களாயும் செடி மன்னுதாயஞ் செற்றார்களாயுமிருப்பர்களாயிற்று. செடிமன்னு காயம் சொற்றார்கள் -உடம்பிலே தூறுமண்டும்படியிருப்பவர்கள் என்றபடி. தவத்திற்காக நெடுங்காலம் ஒவ்வொரு ஆஸனத்திலிருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறுமண்டிவிடும். இங்கே “நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து, அறியாதிளங்கிரி யென்றெண்ணிப்-பிரியாது, பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்னும், வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு” என்ற பூதத்தாழ்வார் பாசுரம் நினைக்கத்தகும். (இதன் கருத்தாவது-) திருமலையேறும் வழியில் பலர்வீற்றிருந்து எம்பெருமானை நோக்கித் தவம்புரிகின்றனர்: அப்போது, மூச்சுவிடுதல், உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ்செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே யிருந்ததனால் அவர்களது கூந்தற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்திருக்கவே, பூங்கொடிகளானவை அந்தக் கூந்தலின்மேலே படர்கின்றனவாம். பண்டு வான்மீகிமுனிவர்மீது புற்று மூடினாப்போலே இந்த பக்தர்களின்மீதும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமான வொரு காட்சியாக அமைந்தது-என்பதாம்.

English Translation

Even those who cut attachments, tame their senses, and mortify their bodies, -till weeds grow on them, -are left without a goal; they enjoy a spell of heaven, then return. Reach for the Garuda-banner Lord and then there is no return

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்