விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேரும் கொடை புகழ்*  எல்லை இலானை,*  ஓர் ஆயிரம் 
    பேரும் உடைய பிரானை அல்லால்*  மற்று யான் கிலேன்,* 
    மாரி அனைய கை*  மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,* 
    பாரில் ஓர் பற்றையைப்*  பச்சைப் பசும் பொய்கள் பேசவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேரும் - தனக்குத் தகுதியான
கொடை புகழ் - ஔதார்யத்தினாலாகிய புகழுக்கு
எல்லை இலானை - எல்லையில்லாதிருப்பவனும்
ஓர் ஆயிரம் பேரும் உடைய - ஆயிரந் திருநாமங்களையுடைய உபகாரநனுமான
பிரானை அல்லால் - எம்பெருமானை யன்றி

 

விளக்க உரை

கீழ் ஆறு பாசுரங்களினால் பரோபதேசம் செய்தருளின ஆழ்வார், தம் உபதேசம் கேட்டு ஒருவரும் திருந்தக காணாமையாலே வெறுத்து அவர்களைவிட்டு, எம்பெருமானை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகையாகிற பாவம் எனக்கு இல்லையாகப் பெற்றதே! என்று தம்மளவிலே தாம் உகந்து பேசுகிறார். “வழிபறிக்கும் நிலத்தில் தன்கைப் பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே, இவர்களைப் போலன்றியே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேனென்று ப்ரீதராகிறார்” என்பது நம்பிள்ளை ஈடு. சேருங்கொடை புகழெல்லையிலானை = உலகத்தில் கொடையாளிகள் பலர் இருப்பினும் இன்னான் இன்னது கொடுத்தான்’ என்று சொன்னால் ‘அதை நான் நம்புகின்றிலேன்’ என்பாருண்டு; எம்பெருமான் உபய விபூதியையும் ஒருவனுக்குக் கொடுத்தருளினனென்றாலும் ‘இது அஸம்பாவிதம்’ என்பாரில்லை; கொடைபுகழ் பொருந்தியிருக்குமாயிற்று எம்பெருமானுக்கு. இத்தால - கவி பாடுகிறவர்களுக்கு விசாலமான விஷயங்களுண்டென்றதாகிறது.

English Translation

The limitless Lord of great munificence bears a thousand names. He alone is worthy of my praise. I can not utter blatant lies over mortals, such as "Your arms are like mountains!", "Your hands are like rain clouds!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்