விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அதிருங் கடல்நிற வண்ணனை*  ஆய்ச்சி 
    மதுரமுலை ஊட்டி*  வஞ்சித்து வைத்துப்*
    பதறப் படாமே*  பழந் தாம்பால் ஆர்த்த* 
    உதரம் இருந்தவா காணீரே* 
    ஒளிவளையீர் வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அதிரும் - கோஷிக்கின்ற;
கடல்நிறம் - கடலினது நிறம்போன்ற;
வண்ணனை - நிறத்தையுடைய கண்ணனுக்கு;
ஆய்ச்சி - யசோதையானவள்;
மதுரம் முலை ஊட்டி - இனிய முலைப்பாலை ஊட்டி;

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளில் எல்லாஞ் சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைத் திருடி உண்டதை அவ்விடைச்சிகள் வந்து முறையிட, அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தாளென்பது இதில் அறியத்தக்கது. ‘கடல்நிறவண்ணன்’ என்னாமல் ‘அதிருங் கடல்நிற வண்ணன்’ என்றது கண்ணனுடைய அடங்காத் தன்மையைக் காட்டும்.

உரை:2

அதிரும் கடல் போன்ற நிறத்தைக் கொண்ட கண்ணனை ஆய்ச்சியாகிய யசோதைப்பிராட்டியார் இனிமையான முலைப்பாலை ஊட்டி அந்தச் சுவையில் அவன் மயங்கிக் கிடக்குமாறு அவனை ஏமாற்றி தான் முன் எண்ணியபடி பழைய தாம்புக்கயிற்றால் கட்டினாள்; அப்படி அவள் கட்டிய தாம்புக்கயிற்றின் தழும்பு இருக்கும் வயிற்றின் அழகைக் காணுங்கள். ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.

English Translation

Bright bangled Ladies, come here and see the beautiful radiant stomach of the dark ocean hued Lord. His mother gave him sweet suck, then stealthily bound him with an old rope without rousing him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்