விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோலமே! தாமரைக் கண்ணது ஓர்*  அஞ்சன 
    நீலமே,*  நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
    சீலமே,*  சென்று செல்லாதன*  முன் நிலாம் 
    காலமே,*  உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோலமே -அழகுதானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே!
தாமரைக் கண்ணது - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய
ஓர் அஞ்சனம் நீலமே - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே!
நின்று - நிலை நின்று
எனது ஆவியை - என் ஆத்மாவை

விளக்க உரை

“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச்செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார். கோலமே!= கோலம் என்று அழகுக்குப் பெயர்; அழகியவனே! என்று சொல்லவேண்டியிருக்க அழகே! என்றது- ‘அழகுதானே ஒரு வடிவெடுத்தது’ என்னலாம்படியிருக்கையாலே. இவ்விடத்தில் ‘அழகே விஞ்சி அத்தையிட்டு நிரூபிக்க வேண்டும்படி யிருக்கையாலே கோலமே யென்கிறார்” என்ற ஈடு காண்க. தாமரைக்கண்ணதோர் அஞ்சனநீலமே!= கீழ்ச்சொன்ன அழகுக்கு ஆச்ரயம் திருமேனி: அந்தத் திருமேனிக்குள்ளே மிகச் சிறந்தது கண்ணழகு; அதனை யநுபவிக்கிறபடி. “க: புண்டரீகநயந: ” என்னலாம்படியன்றோவிருப்பது. அஞ்சன நீலமே என்பதை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள். அஞ்சனமே, நீலமே! என்று இரண்டு விளியாகப் பிரித்தல், அஞ்சன த்ரவ்யத்தின் நீலநிறந்தான் வடிவானவனே! என்னுதல்.

English Translation

O My Lord of beautiful lotus eyes, and a hue dark as collyrium, O Good one breaking my heart! O Bearer of the past, present and future! When, O when will I see you to my fil?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்