விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
    நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 
    அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
    முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடி ஓங்கு - தங்களுடைய ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான
நூற்றுவர் - (துரியோதனன் முதலானோர்) நூறுபேர்களும்
வீய - முடியும்படி
அன்று - முன்பொருகால்
ஐவர்க்கு - பஞ்சபாண்டவர்களுக்கு

விளக்க உரை

இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும் வநவாஸாதிகளைப் பண்ணுவித்தும், இவ்வழிகளாலே தங்களுடைய ராஜ்யப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான துரியோதநாதியர் நூற்று வரும் முடியும்படி பஞ்சபாண்டவர்களுக்குப் பலவகை யுபகாரங்களைப் பண்ணின எம்பெருமானைக் குறித்து ஆழ்வார் அருளிச்செய்த வாசிக கைங்கரியரூபமான ஆயிரத்தினுள்ளும் பாகவத சேஷத்வ பர்யந்தமாகப் பேசின இத்திருவாய்மொழியை நெஞ்சிலே படியும்படி கற்க சக்தராசில் பாகவத சேஷத்வத்திற்கு இடையூறான பிறவி அடியறும் என்றாராயிற்று. ஈற்றடியில் ஆர என்பதற்கு ‘நெஞ்சிலே படியும்படி’ என்று பொருள் கொள்வதிற் காட்டிலும் ‘ஒரு பாட்டும் நழுவவிடாமே பூர்த்தியாக’ என்று பொருள் கொள்வது சிறக்கும். “அடியார் தம்மடியாரெம்மடிகளே” என்ற ஒன்பதாம் பாசுரமானவுடனே நிபுணர்களான அத்யாபர்களுங்குட “அடியார்ந்தவையமுண்டு” என்ற பத்தாவது பாசுரத்தை மறதியினால் விட்டிட்டு “அடியோங்கு நூற்றுவர்வீய” என்ற பதினோராம் பாசுரத்தை யனுஸந்திப்பதுண்டாதலால் ஸர்வஜ்ஜரான ஆழ்வார் ‘அப்படி ஒரு பாசுரத்தை யநுஸந்திப்பதுண்டாதலால் ஸர்வஜ்ஞரான ஆழ்வார் ‘அப்படி ஒரு பாகத்தை நழுவ்விடவேண்டா; ஆரக் கற்கவேணும்’ என்று உத்போதனம் செய்தருளுகின்றார்போலும்.

English Translation

This decad of the thousand songs on devotees of the Lord who aided the five against the hundred, by Kurugur city's Satakopan, -those who can sing it will end Karmic life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்