விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நம்பனை ஞாலம் படைத்தவனை*  திரு மார்பனை,* 
    உம்பர் உலகினில் யார்க்கும்*  உணர்வு அரியான் தன்னை,* 
    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*  அவர் கண்டீர்,* 
    எம் பல் பிறப்பிடைதோறு*  எம் தொழுகுலம் தாங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம்பனை - நம்பப்படுமவனும்
ஞானம் படைத்தவனை - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும்
திருமார்பனை - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும்
உம்பர் உலகினில் - மேலுலகங்களில்
யார்க்கும் - எப்படிப்பட்டவர்களுக்கும்

விளக்க உரை

அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ச்ரியபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார். எப்படிப்பட்ட நிலைமையிலும் சேதநர்க்குத் தஞ்சமாக நம்பப்படுமவனாய், ஜகத்தையெல்லா முண்டாக்குவதுஞ் செய்து இந்நீர்மைக்கு அடியான ச்ரிய: பதித்வத்தை யுடையவனாய், மேலானவுலகங்களில் எத்தனையேனும் மேம்பாடுடைய பிரமன் முதலியோர்க்கும் உணரமுடியாதிருப்பவனுமான எம்பெருமானை ஏத்துமவர்கள் கும்பீபாக நரகத்திற்குச் செல்லுதற்குரிய பாவங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எமது தொழுகைக்கு உரிய சிறந்த குலத்திற் பிறந்தவர்களாகக் கொள்ளப்படுபவர்கள் என்றதாயிற்று. கும்பிநரகர்கள் என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவதுண்டு; ஆறாயிரப்படியில் “கும்பீநரகயாதநாநுபவாநுகுண பாபங்களைப் பண்ணினாரேயாகிலும்” என்றருளிச் செய்திருக்கிறபடியே, கும்பீபாக நரகத்தில் துன்பங்களை யநுபவிததற்கீடான பாவங்களைச் செய்தவர் என்பது ஒரு பொருள்; இப்பொருளில், அவர்கள் இவ்வுலகத்திலேயே யுள்ளவர்கள் என்பது பெறப்படும். ‘கும்பீபாக நரகத்திலே கிடப்பவர்கள்’ என்பது மற்றொரு பொருள். “கும்பீபாகத்திலே து:க்காநுபவம் பண்ணா நிற்க. திருநாமத்தைச்சொல்லக் கூடுமாவென்னில்; க்லேசாதிசயத்தாலே அம்மே! அப்பா! என்னக்கூடாதோ வென்று காணும் இவர்க்கு நினைவு.” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்க. “மஹாபாபபலமான கும்பீபாக நரகத்திலே கிடந்தும் அங்கே திருநாமத்தைச் சொல்லுவர்களாகில்” என்பது இரு பத்துநாலாயிரப்படி யருளிச்செயல். கும்பீபாக நரகத்திலுள்ளவர்களை ஆழ்வார் எங்ஙனே தொழக்கூடும்? என்று கேள்வி பிறக்கும்; அவர்கள் திருமார்பனை ஏத்தினார்களா இல்லையா என்பதை ஆழ்வார் எங்ஙனே தெரிந்துகொள்வது? என்றும் கேள்வி பிறக்கும்; பாகவதர் திறத்தில் ஆழ்வார்க்குள்ள ப்ரதிபத்தி விசேஷத்தைத் தெரிவிப்பது மாத்திரத்தில் விச்ராந்தமான இந்த வசநவ்யக்திகளில் கேள்வி கேட்கலாகாதென்பர் பெரியோர்.

English Translation

The trusted Lord who bears Lakshmi and the maker-of-the-worlds Brahma on his person is incomprehensible even to the great celestials. Whoever praises him, even from the lowest kumbi hell, is my master through every life, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்