விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆளும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    தோளும் ஓர் நான்கு உடைத்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
    தாளும் தடக் கையும் கூப்பிப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    நாளும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடை நாதரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆளும் பரமனை - ஆள்கின்ற பரம புருஷனாயும்
கண்ணனை - ஸ்ரீக்ருஷ்ணனாயும்
ஆழி பிரான் தன்னை - திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும்
ஓர் நான்கு தோளும் உடை - ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும்
தூ மணி வண்ணன் - பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற

விளக்க உரை

எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார். கீழ்ப்பாட்டில் * பரமனைப் பயிலுந் திருவுடைய ஸ்ரீவைஷ்ணவர்களே எம்மையாளும் பரமர் என்று சொல்லி வைத்து இப்பாட்டில் ‘ஆளும்பரமனை’ என்றால் இது தகுதியோ? பாகவதர்களன்றோ ஆளும்பரமா! இப்போது எம்பெருமானை ஆளும்பரமனாகச் சொல்லலாமோ வென்னில்; சொல்லலாம்; எம்பெருமான் தன் திருவடிகளின் கீழ் வந்து புகுந்தவர்களைப் பாகவத சேஷபூதர்களாக ஆக்கி ஆள்கின்றானென்னபதுவே இங்க விவக்ஷிதம். “அடியார்க்கென்னை யாட்படுத்தவிமலன்” என்ற திருப்பாணாழ்வார் பாசுரம் இங்க அநுஸந்திக்கத்தகும். கண்ணனை = பாகவத சேஷத்வத்தை ஸ்வாநுஷ்டான முகத்தாலே காட்டியருளினவன் கண்ணபிரான் எங்ஙனேயென்னில், பாகவதர்களில் தலைவனான நம்பிமூத்த பிரானுக்கு (-பலராமனுக்கு)ப் பின்பிறந்து “பாதேவற்கோர் கீழ்க்கன்றாய்” என்னும்படி அவனளவிலே பாரதந்திரியத்தைக் காட்டினபடி காண்க. ஆழிப்பிரான்தன்னை = திருவவதரிக்கும்போதே கையுந்திருவாழியுமாய்த் திருவவதரித்து, பிறகு பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினவன்.

English Translation

The discus-bearing Lord, my gem-hued radiance Lord and master, has four mighty arms. Those who worship him with hands and feet are my masters forever, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்