விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடல்வண்ணன் கண்ணன்*  விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்* 
    படஅரவின் அணைக்கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,* 
    அடவரும் படை மங்க*  ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,*  அன்றுதேர் 
    கடவிய பெருமான்*  கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடல் வண்ணன் - கடல் போன்ற நிறத்தையுடையவனாயும்
கண்ணன் - கண்ணபிரானாயும்
விண்ணவர் - பரமபத்திலுள்ளவர்கட்கு
கரு மாணிக்கம் - நீலமணிபோலே போக்யனாயும்
எனது ஆர் உயிர் - எனது அருமையான உயிராயும்

விளக்க உரை

ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செயய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும். பரிச்சேதிக்க வொண்ணாத மஹிமையை யுடையனாய்* அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கசாயியா யிருந்துவைத்து வஸுதேவக்ருஹத்தில் அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் மாளும்படியாகப் பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார். ஸேநாதூளியும் உழவுகோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே தொங்கவிட்ட திருவடிகளும் அதிலே சாத்தின சிறு சதங்கையுமாய் ஸாரத்த்ய வேஷத்தோடே நின்றபோதைத் திருவடிகளில் ஆபரணத்வநி செவிப்படவும் அவ்வடிவைக் காணவுமாயிற்று இவர்க்குண்டான ஆசை.

English Translation

The ocean-hued Krishna, the black gem of the celestials, my very own soul, is the radiant Lord reclining on a hooded serpent. He drove the chariot in war for the five against the hundred. O, when will these eyes of mine see his victorious feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்