விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எழுமைக்கும் எனது ஆவிக்கு*  இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
    கெழுமிய கதிர்ச் சோதியை*  மணிவண்ணனை குடக் கூத்தனை,* 
    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்*  கன்னல் கனியினை,* 
    தொழுமின் தூய மனத்தர் ஆய்*  இறையும் நில்லா துயரங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுமைக்கும் - எல்லா நிலைமைகளிலும்
எனது ஆவிக்கு - என் ஆத்மாவுக்கு
இன் அமுதத்தினை - இனிய அங்குதம் போன்வனும்
எனது ஆர் உயிர் - என்னுடைய அருமையான உயிரோடே
கெழுமிய - கலந்து நிற்கிற

விளக்க உரை

எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுபைனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்பைத்வசங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்துபோம் என்கிறார். (எனது ஆவிக்கு ஏழுமைக்கும் இன்னமுதத்தினை) பகவத்விஷய ரஸமறியாமல் விஷயாந்தரங்களில் மண்டிக்கிடந்த என்னெஞ்சுக்கு இனிமேலுள்ள காலமெல்லாம் பரம யோக்யனாயிருப்பவனை யென்றபடி. ஏழுமைக்கும் என்றது காலமுள்ளதனையும் என்றவாறு. (எனது ஆருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை) எம்பெருமானும் ஆழ்வாரோடே கலந்த பின்பே ஒளிமல்கப்பெற்றானெக்க. இங்கே பரம போக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “தாம் கிட்டுகை அத்தலைக்கு நிறக்கேடென்றிருந்தாரிவர்; அது மற்றைப்படியாய், தம்மைச் செறிய செறிய தீப்தனாயிருந்தான். விழுமியவமரர் முன்னர்விழுங்கும் கன்னல்கனியினை = கன்னல்கனியென்று உலகில் ஒரு கனி கிடையாது; ஆழ்வார் எம்பெருமானுடைய விவக்ஷண போக்யதையை நோக்கி இங்ஙனே அபூர்வமாகப்பேசுகிறார். கன்னல் என்பது அக்காரக்கட்டி; அதைச் செடியின் ஸ்தானத்திலே யாக்கி அதில் பழுத்தபழம் ஒன்று இருக்குமானால் அது எவ்வளவு போக்யமாயிருக்குமோ அவ்வளவு போக்யன் எம்பெருமான் என்றவாறு. இந்தக் கனியை உண்ணவல்ல அதிகாரிகளும் விலக்ஷணர் என்கிறது. “விழுமிய வமரர் முனிவர் விழுங்கும்” என்பதனால்.

English Translation

Through seven lives my heart's nectar, my soul's companion, my radiant lamp, my black gem, my pot-dancer, he is the fruit enjoyed by the good celestials and sages. Worship him with a pure heart, your woes will instantly disappear.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்