விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர்மை இல் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,* 
    பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந்து ஆடி* 
    நீர்மல்கு கண்ணினர் ஆகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,* 
    ஊன் மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்கட்கு என் செய்வாரே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர்மை இல் - ஈர நெஞ்சு இல்லாதவர்களான
நூற்றுவர் - துரியோதனன் முதலிய நூறு பேரும்
வீய - மாளும்படியாக,
ஐவர்க்கு - பஞ்சபாண்டவர்களுக்“கு
அருள் செய்து நின்று - கிருபை பண்ணி

விளக்க உரை

அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப்போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில். கண்ணபிரான் முந்துற முன்னம் ஸஞ்ஜயனை யனுப்பிப் பின்பு தான் நேரிற்சென்று பாண்டவர்களையும் கௌரவர்களையும் சேரவிடலாமோ என்று பார்த்தவிடத்து, அந்த நூற்றுபவர் ஒருபடியாலும் இசையாதே ‘எங்கள் உறவினரும் ஜீவித்து நாங்களும் ஜீவிப்பதென்பதில்லை; அவர்களுக்கு ஒரு குடியிருப்பும் கொடுக்கமாட்டோம்; நாங்கள் பலராகையாலே பூமிப்பரப்படங்கலும் எங்களுக்கே இடம்பொருமத்தனை; அவர்களுக்கு க்ருஷ்ணனும் தருமம் உண்டு; அதற்குப் பலனான ஸ்வர்க்கத்தை அவர்கள் அநுபவிக்கக்கடவர்கள்; நாங்கள் பூமியை ஆள்வோம்’ என்று வெட்டொன்று துண்டிரண்டாக வார்த்தை சொல்ல, ஒருபடியாலும் அவர்கள் இசையக் காணாமையாலே இனி இவர்களைத் தொலைப்பது தவிர வேறு வழியில்லை யென்றுகொண்டு நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்றான் கண்ணபிரான்; அது இங்கு முதலடியிற் கூறப்பட்டது.

English Translation

The radiant Lord unleashed a terrible army over the unfair hundred and granted victory to the five. Of what use are men in the good world who built up their biceps if they do not melt their hearts, dance and sing and in joy?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்