விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வம்பு அவிழ் கோதைபொருட்டா*  மால்விடை ஏழும் அடர்த்த,* 
    செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,* 
    கும்பிடு நட்டம் இட்டு ஆடி*  கோகு உகட்டுண்டு உழலாதார்,* 
    தம்பிறப்பால் பயன் என்னே*  சாது சனங்களிடையே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வம்பு அவிழ்  கோதை பொருட்டா - நறுமணம் மிக்க பூமாலையணிந்துள்ள நப்பின்னைக்காக
மால் விடை ஏழும் அடர்த்த - பெரிய ரிஷபங்களேழையும் வலியக்கினவனும்
செம் பவளம் திரள் வாயன் - சிவந்த பவளம் போன்று திரண்ட அதரத்தையுடையவனுமான
சரீதரன் - திருமாலினது
தொல் புகழ் - நிஜமான புகழை

விளக்க உரை

கும்பனென்னும் இடையவர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தைகந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகையும் கண்ணபிரான் ஏழுதிருவுருககொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்ற இவ்வரலாற்றை அழகாகப் பாடிக்கொண்டு தலைகீழாகக் கூத்தாடி அடைவுகெட ஆராவாரஞ்செய்து திரியாத பாவிகள் ஸாத்விக கோஷ்டிகளின் நடுவே தாங்களும் சிலராய்ப் பிறந்து திரிவது ஏனோ என்று வெறுத்துரைக்கின்றார். வம்பவிழ்கோதை- கோதையென்று பூமாலைக்குப் பெயர்; அதனைணிந்துள்ள மயிர்முடிக்குஇலக்கணை. பரமைளம் மிகுந்த அளகபாரத்தையுடைய நப்பின்னையென்று பொருள்படுதலால் அன்மொழித்தொகை. செம்பவளத்திரள்வாயன் - விரோதி நிரஸநஞ்செய்து திருமணம் புணர்ந்த உவப்பினால் முறுவல்செய்து நின்றநிலை ஆழ்வார்க்கு ப்ரத்யக்ஷஸமமாயிருக்கிறபடி. தொல்புகழ் -அந்த எருதுகிள் வலியையடக்கின்து ஈ எறும்பு கொசு முதலியவற்றை நசுக்குவதபோலே கண்ணபிரானுனக்கு ஆயாஸமறச் செய்த செயலாலதலால் அதனைத் தொல்புகழென்கிறாரல்லர்; அப்பெருமானுடைய ஸௌலப்ய ஸௌசீல்யங்களே இங்குத் தொல்புகழாரம்.

English Translation

Sing the praise of Sridhara of coral lips who killed seven bulls for the love of Nappinnai. Dance with hands over your heads, -dignity be blown, -or else what use is this birth amid saintly men?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்