விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
    மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 
    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
    வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு - வண்டுகள்
கூடி - மொய்த்து
அறையும் - (மதுபானத்தினாலுண்டான களிப்பினால்) ரீங்காரஞ் செய்கின்ற
தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை - காளமேகச்யாமளனைக் குறித்து
மாடு - சுற்றுப்பக்கங்களில்

விளக்க உரை

மஹாஜ்ஞாநவான்களான நித்யஸூரிகள் “இருள் தருமா ஞாலமான இந்தப் பிரபஞ்சத்திற பிறந்தும் நம்மைப்போன்ற நன் ஞானத்தைப் பெற்று எம்பெருமானை இவ்வாழ்வார் அநுபவிக்கினறரே!” என்று நம்மாழ்வாரிடத்துத் தாம் கொண்ட பேரன்பினால், ஆழ்வாரருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓதினவர்களிடத்திலும் ப்ரீதி கொண்டு ஸர்வேச்வரனையும் விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பர்களென்க. ஆழ்வார் தாம் இந்த லீலாவிபூதியை எம்பெருமானுடைய ஸ்வரூபமாக எண்ணி ஈடுபட்டதனோடு நில்லாமல்அதனை யாவரும் அநுஸந்திக்கும்படி செந்தமிழ்ப்பாடலினால் பாடியருளித்ததந்த மஹோபகாரகராதலால் வண்சடகோபன் என்றார். வீடு இலபோகம் = வீடு - ‘விடு’ என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். இல இன்மையினடியாப் பிறந்த எதிரிமறைக் குறிப்புப் பெயரெச்சம். போக: என்னும் வடசொல்; போகமெனத்திரிந்தது. விரும்புவர் என்ற பயனிலைக்கு வல்லார் என்பது செயப்படுபொருள். அமரர் வல்லாரை விரும்புவர் என்றபடியாகும்.

English Translation

This decad of the sweet thousand songs by flower-groved Kurugur's satakopan addressing the Lord of Tulasi garland provides liberation and the company of celestials to all who master it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்