விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
    வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
    வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
    ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வருந்தாத - ப்ரயந்த ஸரத்யமல்லாத ஸ்வாபாவிகமான
அரும் தவத்த - அருமையான தலத்தின் பலனாக வந்ததோ என்னலாம்படியான
மலர் கதிரின் - பாம்பின் கிரணங்களையுடைய
சுடர் உடம்பு ஆய் - தேஜோமய திவ்யமங்கள விந்ரஹயுக்தனாய்
வருந்தாத ஞானம் ஆய் - ஸ்வாபாவிக ஜ்ஞான யுக்தனாய்

விளக்க உரை

உரை:1

அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?

உரை:2

நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப்பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்திவைத்தாயில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார். * வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய் = எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம் எப்படிப்பட்டதென்றால் (வருந்தாத) ஒரு ப்ரயத்நத்தினால் ஸித்தமன்றிக்கே ஸ்வஸங்கல்ப மாத்திரத்தினால் பரிக்ருஹீதம். இன்னமும் எப்படிப்பட்டதென்னில், (அருந்தவந்த) பக்த ஜனங்களின் தவப்பயனோ என்னலாம்படி யிருக்கும் இன்னமும் எப்படிப்பட்ட தென்னில், (மலர்கதிரின்) எங்கும் பரந்த வொளியையுடையது. ஆக இப்படிப்பட்ட திருமேனியையுடைமை முதலடியால் சொல்லப்பட்டது. “வருந்தாத ஞானமாய்” என்றது. நம்மைப்போல் ப்ரயாஸப்பட்டு ஞானம் ஸம்பாதிக்க வேண்டாதே எம்பெருமான் இயற்கையாகவே விசாலமான ஞானம் படைத்தவனென்றவாறு.

English Translation

O, Lord of natural radiance, through past, present and future! Exceeding the radiance obtained by the hardest penance, you stand above, guarding the Universe, How can I ever praise you fully?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்