விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தம் மாமன் நந்தகோபாலன்*  தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்* 
    செம்மாந்திரே என்று சொல்லி*  செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*
    கொம்மை முலையும் இடையும்*  கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு* 
    இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தம் மாமன் - என்மகள்தனக்கு மாமனாரான;
நந்த கோபாலன் - நந்தகோபரானவர்;
என் மகள் தன்னை - என் பெண்ணை;
தழீஇக் கொண்டு - (அன்புடன்) தழுவிக் கொண்டு;
செம்மாந்திரு என்று சொல்லி - (வெட்கத்தாலே தரையைக் கீறிமுகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், மாமியார் சீரட்டுதலைப்பற்றிச் சங்கித்தாள்; இப்பாட்டில் மாமனார் சீரட்டுதலைச் சங்கிக்கிறாள்; -- என் மகனின் மாமனான நந்தகோபர் இவளையழைத்து முத்தமிட்டு இவளது சர்வாவய ஸெளந்தர்யத்தையுங் கண்டு மகிழ்ந்து “இப்படி அழகிற் சிறந்த பெண் பிள்ளையைப் பெற்ற தாய் இவளைப் பிரிந்து உயிர்வாழ்ந்திருப்பது அரிது” என்று அன்புதோற்றச் சொல்வாரோ? அன்றி விருப்பமற்று சிறிதும் விகாரமடையாமல் இருப்பாரோ? என சங்கித்தவாறு. தழீஇ-தழுவி; அளபெடை கொண்ட வினையெச்சம். செம்மாந்திரு-முழுச்சொல். தாயர்-பூஜையிற் பன்மை.

English Translation

Patting my daughter, will her father-in-law Nandagopala say “Look up”, then seeing her beautiful fish-like eyes, her coral lips, her risen breasts, her slender waist and healthy bamboo-like arms. Would he muse, “This girl’s mother couldn’t still be living”? O Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்