விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
    ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
    தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
    ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாமோதரனை - தாமோதரனென்கிற திரு நாமமுடையனும்
தனி முதல்வனை - ஒப்பற்ற ஸகல ஜகத்காரண பூதனும்
ஞாலம் உண்டவனை-  (பிரளயகாலத்தில்) உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான எம்பெருமானை
தரம் அறிய - பகுத்து அறிவதற்கு
ஒருவர்க்கு ஆமோ என்று - ஒருவராலும் ஸாத்யமாகாதென்று துணிந்து

விளக்க உரை

தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம். அடியவர்கட்குப் பரதந்திரனும், ஸகல ஜகத்துகளுக்கும் முதற்காரணமானவனும், பிரளயாபத்திலே பேருதவி புரிகின்றவனுமானவனை, அளவிட்டறிய ஆராலாவது ஆகுமோவென்று சொல்லிக்கொண்டு தொழுமவர்களாய், அந்த தாமோதரனுக்குச் காரிரபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும்-கடுகிலே கடலையடக்குமா போலே என்பக்கலிலே தன் குணக்கடலைவைத்து என்னை யடிமைகொண்ட ஸ்வாமியை அளவிட்டு அறியப்போமோ? என்றாராயிற்று. உலகப்பொதுவாக அவன் செய்யு முபகாரங்களை ஒருபடியறிந்தாலும், என்பக்கலில் அவன் பண்ணின விசேஷோபகாரம் அறியவாரிது என்றவாறு.

English Translation

Can even those who worship "Damodara", know his greatness? He is the first-cause, and the swallower of the Universe. Can even Brahma or Siva peforming steady contemplation fathom his greatness, when they are but a part of him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்