விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்*  எம்மான் என் செங்கனி வாய்* 
    உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளி
    பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
    மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லைகாண் என் வாமனனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் வாமனனே - எனக்காக வாமனாவதாரமெடுத்த பகவானே!
திரிவிக்கிரமன் என்று - மூவடியாலே உலகங்களையெல்லாமளந்தவன் என்றும்
செம் தாமரை கண் எம்மான் என்று - செந்தாமரை போன்ற கண்களையுடைய ஸ்வாமியென்றும்
என் செம் கனிவாய உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று -
எனக்கு போக்யமாய்ச் சிவந்து கனிந்த அதரத்தினுடைய அழகுபொலிந்த சுத்த ஸ்படிக வாணமான திருமுத்துக்களையுடையவன் என்றும்.
உள்ளி - அநுஸந்திந்து

விளக்க உரை

எம்பெருமானே! உன்னுடைய குணாநுஸந்தாந பூர்வகமாக உன்னைத் துதித்துவணங்கி யநுபவிக்கு மிவிவளவையே பிரயோஜனமாகக் கொண்டிருக்கும் படியான மனத்தை எனக்குத் தந்தருளினாய்; உன்னுடைய ஸாமாத்தியமே ஸாமாத்தியம்! என்று கொண்டாடுகிறார். மூன்றடியாலே ஸகல லோகங்களையும் தன் காற்கீழே யிட்டுக்கொண்டவனே! என்றும் கடாக்ஷவீக்ஷணத்தாலே என்னைத் தன் திருவடிக்கீழ் இட்டுக் கொண்டவனே! என்றும் சிவந்து கனிந்த திருவதரத்திலே பரபாகசோபையுட்ன விளங்கா நின்ற திருமுத்துக்களின் அழகைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவளே! என்றும், இங்ஙனே பலகால் நினைத்தும் வாய்வந்தபடி பேசியும் குணபரவசனாய் வணங்கியும், இப்படி உள்ளதனை நாளையும் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு உன் திருவடிகளிலே அடிமை செய்யும்படியான மநஸ்ஸைத் தந்தாய்; வல்லைகாண் எம்பிரானே! வல்லைகாண்; ஒருவர்க்குஞ் செய்யமுடியாத காரியமன்றோ செய்தது! என்று கொண்டாடிப் பேசினாராயிற்று. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி பரம போக்யமானது; “பழைய நெஞ்சைத் திருத்தினவளவன்றிக்கே கருவுகலத்திலே யொரு நெஞ்சைத்தந்தாய். திவ்யம் ததாமி போலே. ‘பழைய நெஞ்சு இது’ என்று ப்ர்த்ய பிஜ்ஞை பண்ணவொண்ணாதபடி யிராநின்றது” என்பதாம். கருவுகலமாவது ஸந்நிதிகளில் திருவாபரணம் முதலிய சிறந்த வஸ்துக்கள் சேமித்து வைக்குமிடம் அதிலிருந்து ஒரு மநஸ்ஸையெடுத்து ஆழ்வார்க்கு எம்பெருமான் நற்கொடையாகக் கொடுத்தானாம்.

English Translation

Chanting 'Trivikrama' and other names, I thought of my Lord with red lotus eyes, coral lips, and bright crystal-hue. O Lord who came as a manikin, through courtless ages you made my heart serve you and worship your lotus feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்