விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
    ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
    மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

போகின்ற காலங்கள் - நிகழ் காலங்கள்
போய காலங்கள் - இறந்த காலங்கள்
போகு காலங்கள் - எதிர்காலங்கள் (ஆகிய இவற்றில்)
தாய் தந்தை உயிர்ஆகின்றாய் - தாயும் தந்தையும் உயிருமாயிருப்பவனே!
பாகின்ற - பாவுகின்ற

விளக்க உரை

ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார். முதலடியில் மூன்று காலங்களையுமெடுத்திருக்கின்றார்; இறந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்பெருமான் செய்யும் நன்மையைத் தெரிந்துகொண்டு பேசமுடியும் எதிர்காலத்தில் இனி அவன் செய்யப்போகிற நன்மையை இவர் எங்ஙனே தெரிந்நு கொண்டாரென்று சிலர் சங்கிக்கக்கூடும் எந்தக்காலத்திலும் எம்பெருமானல்லது வேறெருவன் ரக்ஷகனல்லன் என்கிற சாஸ்த்ரப்ஸித்தியைக் கொண்டு கூறக்குறையில்லையென்க. இறந்தகாலமும் நிகழ் காலமும், ஒருகாலத்திலே எதிர்காலமாக இருந்தவைதானே; ஆதலாலும் சொல்லக் குறையில்லை யென்ப.

English Translation

My Lord of eternal glory, Great Lord of the three worlds! My Lord of fragrant Tulasi flowers, king of the cool venkatam hill Through past, present and future, my father my mother, my life! Now that I have found you, will I ever let you go?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்