விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரு உடம்பு வான் சுடர்*  செந்தாமரை கண் கை கமலம்,* 
    திரு இடமே மார்வம்*  அயன் இடமே கொப்பூழ்,* 
    ஒருவு இடமும்*  எந்தை பெருமாற்கு அரனே ஓ,* 
    ஒருவு இடம் ஒன்று இன்றி*  என்னுள் கலந்தானுக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னுள் கலந்தானுக்கு - என்னோடு சேர்ந்தவானன
எந்தை பெருமாற்கு - என் சேர்ந்தவனான
திரு உடம்பு - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.
கண் - திருக்கண்கள்
செம் தாமரை - செந்தாமரை மலர்களாயிராநின்றன

விளக்க உரை

பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப்பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடீட ஸம்ச்லேகூஷித்து அத்தாலே ஒளிமல்கப் பெற்றனென்கிறார் இதில். ஒருவிடமொன்றின்றி என்னுள் கலந்தானுக்கு மார்வம் திருவிடம்; கொப்பூழ் அயனிடம் ஒருவிடமும் அரன்; (இப்படிப்பட்ட எந்தைபெருமாற்கு என்னுள் கலந்ததனாலே) திருவுடம்பு வாந்சுடர்; கண் செந்தாமரை; கை கமலம். இப்பாசுரத்தை அநுபவிக்கும் போது நஞஜீயர் மிகவும் ஈடுபட்டு அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு அதாவது---எம்பெருமானுக்கு விக்ரஹமில்லை விபூதியில்லை என்கிறவர்கள் முன்வே ஆப்ததமரான ஆழ்வார் திருவுடம்பு வான்சுடர் என்பதே! ஈச்வரனுக்கு விக்ரஹமில்லை குணமில்லை என்கிறவர்கள் பண்ணிவையாத பாபமில்லை; அவர்கள் அநுவர்த்தித்து அதுகேட்டுக்கொண்டிராதபடி பெருமாள் நமக்குப் பண்ணின உபகாரம் போலே வேறொரு உபகாரமுமில்லை-என்றாம்.

English Translation

He made love to me, no place untouched, His body has a great lustre, the lotus-dame Lakshmi sits on his chest. Brahma sits on his lotus navel and Siva in a corner, too, His eyes are like red lotuses, his hands are like lotus flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்