விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
    அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*
    செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்தாமம் - அழகிய மாலையை யணிந்த
வாள் - ஒறியுள்ள
முடி - திருவபிஷேகமும்
சங்கு ஆழி - சங்கு சக்கரங்களும்
நூல் - பூணூலும்

விளக்க உரை

தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார். இவர் தாம் கீழ்த்திருவாய் மொழியில் “ஒளிக்கொண்ட சொதியுமாய் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ” என்று திருநாட்டிலே சென்று அங்கு நித்யமுக்தர்களின் திரளிலே இருந்து அநுபவிக்ப்பெறுவதைப் பாரித்தாராகிலும் அஸ்மதாதிகளின் உஜ்ஜீவநத்திற்காக எம்பெருமான் ஆழ்வாரை இந்நிரத்திலே இன்றும் சில நாளைக்கு வைத்திருக்கத் ஒருவாறு இந்நிலத்திலேயே காட்டி ஆச்வஸிப்பிக்கின்ற னென்றுணர்க பரமபதத்திலுள்ளாரெல்லார்திறத்திலும் பண்ணும் ஆதரத்தை என்பக்கலிலே பண்ணி என்னோடேவந்து கலந்த பெருமானுக்கு அழகிய மாலையும் ஒளி பொருந்திய திருவபிஷேகமும் திருவாழி திருச்சங்குகளும் யஸ்ஞோபவிதமும திவ்யஹாரமும் உள்ளன; திருக்கண்களோ சிவந்த தாமரைத் தடாகமாயிராநின்றன; சிவந்து கனிந்த திருவதரமும் தாமரையா யிராநின்றது; திருவடிகளும் செந்தாமரையாகவே நின்றன; திருவுடம்போ செம்பொன்னாயிராநின்றது. என்னோடு கலந்த பின்பு அவனுடைய திருமேனியில் பிறந்த புகர் இங்ஙனே யிராநின்றது.

English Translation

My Lord bears a garland, crown, conch and discus, thread and necklace, in a beautiful spot he made love to me, and blended with my soul. His big eyes are like lotus peals, his coral lips are like lotus flowers, his feet are like red lotus, his body glows like red gold.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்