விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
    கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 
    பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
    சூட்டலாகும்*  அம் தாமமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாட்டம் இல் புகழ் - வாட்டமற்ற புகழுடையனான
வாமனனை - வாமனனைக்குறித்து
வண்சடகோபன் - உதாரரான ஆழ்வார்
இசை கூட்டி  - இசையோடே சேர்த்து
சொல் - அருளிச்செய்த

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ஆழ்வார்பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்யகைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. (வாட்டமில்புகழ் வாமனனை) முதற் பாட்டிலே “வாடி வாடுமிவ்வாணுதலே” என்று பராங்குச நாயகி வாட்டமடைந்ததாகச் சொல்லிற்று. அவள் வாடினது எம்பெருமானுடைய புகழ் வாடினனதாகும். இவ்வாட்டம் தீர்ந்ததென்றால் ஆழ்வாருடைய வாட்டம் தீர்ந்ததென்பது சொல்லமலே விளங்கும். கீழே “இவள் மாழை நோக்கொன்றும் வாட்டேன்மினே” என்று தாய்சொன்னவாறே ‘இதோ புறப்பட்டோம்’ என்று லஜ்ஜையோடே வந்து சோற்றினான்; தோற்றவே வாட்டமில் புகழ் வாமனனாயினான். இதனால், இத்திருவாய்மொழியில் ஆழ்வார்க்கு உண்டாயிருந்த அவஸாதம ஒருவாறு எம்பெருமானால் தீர்க்கப்பட்டது என்பது விளங்கும். இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக. தான் யாசனாகியும் தன்னுடைமையைப் பெறுபவனாகையாலே பிறர் யாசிக்கவும் விட்டுக்கொடுப்பனோ என்றபடி. இப்படிப்பட்ட பெருமான் விஷயமாக வண்குருகூர்ச்சடகோபன் இசையோடே புணர்த்துப் பேசின ஆயிரத்தினுள்ளே இப்பத்துப்பாட்டினால் செவ்விமாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்றதாயிற்று. இப்பத்தும் வல்லார்க்கு இதுபலன் என்றவாறு. தாமம் ---தாமா என்னும் வடசொல் விகாரம் மாலையென்று பொருள்

English Translation

This decad of the poetic thousand songs sung by benevolent satakopan addressing the eternal Lod Vamana is a worthy garland at his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்