விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பட்ட போது*  எழு போது அறியாள்,*  விரை 
    மட்டு அலர்*  தண் துழாய் என்னும்,*  சுடர்
    வட்ட வாய்*  நுதி நேமியீர்,*  நுமது 
    இட்டம் என்கொல்*  இவ்ஏழைக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடா - ஒளி பொருந்திய
வட்டம் வாய் - வட்டமான வாயையும்
நுதி - கூர்மையையுமுடைய
நேமியீர் - திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை)
பட்டபோது - ஸூர்யாஸ்தமன காலத்தையும்

விளக்க உரை

உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர்செய்ய நினைத்திருப்பது என்ன? என்று எம்பெருமானைக் கேட்கிறாள். பட்டபோது எழுபோது அறியேன்ஸ்ரீஸூர்யன் அஸ்தமிப்பது உதிப்பது யாதொன்றுமறியாள். “* நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்தி அஸ்தமிதே ரவௌ*” என்று சொல்லுகிறபடியே ஸம்ஸாரிகள் ஸூர்யோதய அஸ்தமன காலங்களைத் தெரிந்துகொண்டுகளிக்கின்றார்கள்; உதயமானவாறே யதேஷ்டமாகத் திரிந்து வேண்டிய பொருள்களை ஆர்ஜிக்கலாமென்று களிக்கிறார்கள்; அஸ்தமித்தவாறே ஆர்ஜித்த பொருள்களைக்கொண்டு யதேஷ்டமாக விஷயபோகங்கள்; செய்யலாமென்று களிக்கிறார்கள்; இப்பெண்பிள்ளையோவென்னில் உதயாஸ்தமயங்களில் வ்யத்பத்தியேயில்லாதவளாயிருக்கின்றாள். சைதந்யமற்றவளோவென்னில், அல்லள்; ‘விரை மட்டலர்தண்டுழாய்’ என்று ஓவாதே உரையாநின்றாள்; பாரிமளமும் தேனும் நிறைந்த திருத்துழாய் விஷயமான வார்த்தையாகவே யிருக்கின்றாள். என்று திருத்தாயார் சொல்லக்கேட்ட எம்பெருமான் ‘அவன்படி அதுவாகில் என்னை என்செய்யச் சொல்லுகிறாய்? என்று உபேக்ஷை‘தோற்ற விருக்க (சுடர்வட்டவாய் இத்யாதி) சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திருவாழியை நீர்ஏந்தியிருப்பது எதற்காக? “எப்போதுங் கைகழலாநேமுயான் நம்மேல் வினைகடிவான்” என்றன்றோ அடியார்கள் அநுஸந்தித்திருப்பது. * பாது ப்ரணதரகூஷர் யாம் விளம்பமஸஹத்நிள, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ ந; ஸ்ரீரங்கநாயக;* என்றும் பேசிக்கொண்டிருப்பா;களே அத்திருவாயுதத்தைக்கொண்டு அநுகூலரை வாழ்விக்கவும் வலஸர், பிரதி கூலரை அழியச்செய்யவும் வல்லீர்; இவள் திறத்து நீர்செய்யநினைத் திருப்பது எதுவோ வென்கிறாள்.

English Translation

Night or day, -She knows not when, -"Dew-blossom Tulasi", She says, O Lord with a powerful radiant discus, pray what have you in store for her?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்