விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைத்தலத்து உள்ள மாடு அழியக்*  கண்ணாலங்கள் செய்து*  இவளை- 
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?*  நம்மை வடுப்படுத்தும்*
    செய்த்தலை எழு நாற்றுப் போல்*  அவன் செய்வன செய்துகொள்ள* 
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல்*  வளர விடுமின்களே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைத்தலத்து உள்ள மாடு அழிய - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து;
கண்ணாலங்கள் செய்து - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி;
இவளை - (நமக்கடங்காத) இவளை;
வைத்து வைத்துக் கொண்டு - நியமித்தும் காவலிட்டும் வைத்துக்கொண்டிருப்பதனால்;
என்ன வாணிபம் - என்ன பயனுண்டாம்;

விளக்க உரை

ந‌ம்குடிக்காக இவளொரு பெண்தானே உள்ள என்று அன்பு மிகுதியால் கையிலுள்ள செல்வத்தையடையச் செலவழித்து இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களையெல்லாஞ் செய்து இவளை நான் காத்து வருவதனால் நமக்கு இறையும்பயனின்றி யொழிந்தமாத்திரமேயல்லாமல் இவளது நட்த்தையினால் நமக்குப் பெருபெருத்த பழிகளும் விளையாநின்றன! என்று கலங்கிப்பேசின தாயை நோக்கி, பந்துக்கள், ஒருவன் தன் க்ஷேத்திரத்தில் உள்ள நாற்ற தன் கருத்துக்கொத்தபடி தான் விநியோகப்படுத்திக்கொள்வது போல, ஸர்வேச்வரன் தனது உடைமையான இவளைத் தன் நினைவின்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு இவளை அவனிடத்திற்கு கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கந்தர்வய நிரூபணம்பண்ணிக் கூறினபடியைத் தாய் கூறினளென்க--.மாடு—செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. கண்ணாலம்-மரூவுமொழி. வடுப்படுத்துதல்—குறைவுபடுத்துதல். செய்—வயல். தலை—ஏழனுருபு.

English Translation

“What use in keeping hen on and on, spending all the wealth on her various celebrations? She will only bring more blame. Like seedling ready for transplantation, leave her to the dark cloud-hued Lord; he can do with her whatever he wishes”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்