விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்வா எம்மையும்*  ஏழ் உலகும்,*  நின் 
    உள்ளே தோற்றிய*  இறைவ! என்று,*
    வெள் ஏறன் நான்முகன்*  இந்திரன் வானவர்,* 
    புள் ஊர்தி*  கழல் பணிந்து ஏத்துவரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள் ஏறன் - வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும்
நான்முகன் - பிரமனும்
இந்திரன் - இந்திரனும்
வானவர் - மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி)
கள்வா - “கள்வனே!

விளக்க உரை

- எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார். “உன் ஈச்வரத்வத்தை மறைத்துக்கொண்டு எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிற கள்வனே!’ எங்களையும் எங்களுக்கிடமான லோகங்களையும் ஸங்கல்பமாத்ரத்தாலே தோன்றுவித்த ஸ்வாமியே!” என்றிங்ஙனம் துதிக்கின்றார்களாம் கருடவாஹனனான பெருமானைச் சிவன் பிரமனிந்திரன் முதலானோர். கள்வா = பிறர் அறியாதபடி காரியஞ்செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் இரா * மடமூட்டுவாரைபோலே உள்ளே பதிகிடந்து ஸத்தையேபிடித்து நோக்கிக்கொண்டு போருமவனாகையாலே கள்வனெனப்படுகிறான். பிள்ளைப்பெருமாளையங்கார் நுர்ற்றெட்டுத் திருப்பதி யந்தா தியில் பேசும் பாசுரமொன்று காண்மின்; --“பண்டேயுன்தொண்டாம் படிவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று கூறாதே-மண்டலத்தோர், புள்வாய்பிளந்தபுயலே! உனைக் கச்சிக் கள்வாவெறோதுவது என்கண்டு?” என்றாம். (அதாவது) ஒருவர்க்கு உரிய பொருளைத் தன்னதாகக் கொள்வது கள்ளமென்பபடும்.

English Translation

Even the bull-rider Siva, the four-faced Brahma, Indra and all the gods look up to the bird-riding Lord. Worship his feet, and call "Prankster Lord! You made the seven worlds and all of us appear in you!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்