விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேவும் எப் பொருளும் படைக்கப்,* 
    பூவில் நான்முகனைப் படைத்த,*
    தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,* 
    பூவும் பூசனையும் தகுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவும் - தேவர்களையும்
எப்பொருளும் - மற்றெல்லாப் பொருள்களையும்
படைக்க - ஸ்ருஷ்டிக்க
பூவில் - (திருநாபிக்) கமலத்திலே
நான்முகனை - பிரமனை

விளக்க உரை

பூ அணிதற்கு ஈடான ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களும், பூஜையீடு தற்கீடான முதன்மையும் எம்பெருமானுக்கன்றி வேறு சிலர்க்கு இல்லாமையாலே அவனே ஸர்வேச்வரனென்கிறார். “எது ஜகத்காரணபூதமோ அதுவே பரப்ரஹ்மம்” என்று வேதாந்தங்கள் அறுதியிடுகையாலே அப்படிப்பட்ட ஜகத்காரணத்வம் எம்பெருமானுக்கே உள்ளது என்பதை முன்னடிகளில் மூதலிக்கிறார். பூவும் பூசனையும் தகுமேஸ்ர = ’குழலழகர்’ என்று ப்ரஸித்திபெற்ற எம்பெருமானுக்குப் பூத் தகமே யன்றிச் சடைமுடியானுக்குத் தகாது; முழுமுதற்கடவுளுக்குப் பூசனை தகுமேயன்றிக் கார்யபூதனுக்குத் தகாது. எம்பார் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராகிக் காளஹஸ்தியிலே சிவபூஜா நிஷ்டராய் நாடோறும் பூப்பறித்து வாரா நிற்கையில் அவரைத் திருத்திப் பணி கொள்ளக் கருதிய பெரிய திருமலைநம்பி அவர் பூப்பறிக்கச் செல்லுமிடத்தே சிஷ்ய வர்க்கங்களைக் கூட்டிக்கொண்டு இப்பாசுரத்தின் விசேஷார்த்தங்களை அழகாக உபந்யஸித்தருள, எம்பார் பூப்பறித்துக்கொண்டே இதனைச் செவியேற்று (பூவும் பூசனையுந்தகுமே என்றதற்கு) ‘தகாது தகாது’ என்று தாம் விடை கூறிக்கொண்டே பூக்குடலையை விட்டெறிந்து திருமலை நம்பி ஸ்ரீபாதத்திலே வந்து சேந்தார் என்ற இதிஹாஸம் இங்கு உணரவுரியது.

English Translation

My Lord created Brahma on his lotus navel, who in turn created the gods and beings of the worlds. Other than my Krishna, is there any Lord worthy of worship with flowers?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்