விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடலும் மலையும்*  விசும்பும் துழாய் எம்போல்,* 
    சுடர் கொள் இராப்பகல்*  துஞ்சாயால் தண் வாடாய்,* 
    அடல் கொள் படை ஆழி*  அம்மானைக் காண்பான் நீ,* 
    உடலம் நோய் உற்றாயோ*  ஊழிதோறு ஊழியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் வாடாய் - குளிர்ந்த காற்றே!
கடலும் - ஸமுத்திரத்தையும்
மலையும் - மலையையும்
விசும்பும் - ஆகாசத்தையும்
துழாய் - தடவிக்கொண்டு எம்மைப்போல.

விளக்க உரை

காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; மாதாரிச்வா ஸதாகதி; என்ற நிகண்டின்படி ஸதாகதியென்று பெயர் பெற்றதாதலால் எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும் உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவதெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனை யும் அ;தற்கு இயல்வாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே மடலூருவாரைப்போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஸந்நிபாத ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயன்றோ என்கிறாள்.

English Translation

O cold wind blowing through oceans, over mountains, and in the sky! Through bright days and nights, like me, you have no rest. Do you too wait age after age and sicken with grief to see the fierce discus-bearing Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்