விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காமுற்ற கையறவோடு*  எல்லே இராப்பகல்,* 
    நீ முற்றக் கண்துயிலாய்*  நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
    தீ முற்றத் தென் இலங்கை*  ஊட்டினான் தாள் நயந்த,* 
    யாம் உற்றது உற்றாயோ?*  வாழி கனை கடலே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இராபகல் முற்ற - இரவும் பகலுமாகிய எப்போதும்
கண் துயிலாய் - கண்ணுறங்காதாகி
நெஞ்சு - உள்ளிடமும்
உருகி - நீராகி
ஏங்குதி - ஏங்குகின்றாய்;

விளக்க உரை

கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும் இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம். கையறவு = கைப்படாமையினாலுண்டாகும் வருத்தத்திற்குக் ‘கையறவு’ என்று பெயர். காமுற்ற கையறவுஸ்ர = ஆசைப்பட்ட பொருள் கிடைக்கப் பெறாமையினாலுண்டான வருத்தம். உண்மையில், கடல்யாதொன்றையும் காமுற்றது மில்லை, அதுகைப்படாமற்போனதமில்லை. வருத்தமுண்டானதுமில்லை; இப்படியிருக்கவும் ஆழ்வார்தமக்குள்ளதெல்லாம் அதற்குமுண்டு போலேயென நினைத்து அருளிச் செய்தவாறு.

English Translation

O Siste, Roaring sea! Have you no sleep? You lament night and day in a heart-rending roll. I desired the Lord's feet who consigned the Southern Lanka to flames; is your plight the same as mine?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்