விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோள் பட்ட சிந்தையையாய்க்*  கூர்வாய அன்றிலே,* 
    சேண் பட்டயாமங்கள்*  சேராது இரங்குதியால்,*
    ஆள் பட்ட எம்மேபோல்,*  நீயும் அரவு அணையான்,* 
    தாள் பட்ட தண் துழாய்த்*  தாமம் காமுற்றாயே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோள்பட்ட - அபஹாரிக்கப்பட்ட
சிந்தையை ஆய் - நெஞ்சையுடையையாகி
கூர்வாய - (அதனால்) தழதழத்த குரலையுடைய
அன்றிலே - அன்றில் பறவையே!
சேண்பட்ட - நெடிதான

விளக்க உரை

அன்றில் என்பது ஒரு பறவை; குர்ரீ என்று வடமொழியிற் கூறப்படும், க்ரௌஞ்சமென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும் அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் ஆழ்வாரது திருச்செவியிலே விழுந்ததாக, அதுவும் பகவத் விஷயத்திலீடுபட்டுப் பிரிவாற்றாமையினால் கத்துகின்றதெனக்கொண்டு, ஐயோ! நீயும் என்னைப்போலே ஆழியானென்னுமாழமோழையில் அகப்பட்டாயே; என்கிறது இப்பாசுரம். தழதழத்த குரலையுடைத்தான அன்றிற்பறவையே! நெஞ்சு பறியுண்டு நெடும் போதாக வருந்திக்கிடக்கின்றாயே! அடிமைப்பட்ட என்னைப்போலே பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற நீயும் அரவணைமேற் பள்ளிகொண்ட முகில் வண்ணணுடைய செல்வித்துழாய் மாலையை ஆசைப்பட்டு இப்பாடுபடுகிறாயோ? என்றளாயிற்று. பகவத் விஷயத்தி லீடுபட்டார்க்கல்லது இப்படிப்பட்ட வருத்தமுண்டாகாதென்று ஆழ்வார் நினைவுபோலும்.

English Translation

O Poor stork! Are you too, like me, caught in the Lord's net Keeping awake through lean hours and calling piercingly, did you too seek the cool Tulasi garland, from the feet of the Lord reclining on the serpent couch?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்