விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
    மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*
    அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
    நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செல்வம் நாராணன் என்ற - ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை
சொல் கேட்டலும் - கேட்டவளவிலே
கண் - கண்களானவை
பனி மல்கும் - நீர் ததும்புகின்றன
நாடுவன் - (எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்!

விளக்க உரை

உரை:1
 
திருநாராயணன் என்னும் பெயரை வழியே செல்வான் ஒருவன் கூறக் கேட்ட அளவில் கண்கள் நீர் பெருகாநிற்கும்; யானும், ‘எங்குற்றாய் எம்பெருமான்!’ என்று தேடாநின்றேன். இது என்ன ஆச்சரியம்! எல்லாக் குணங்களும் நிறைந்த இறைவன், சிறந்த இராக் காலமும் சிறந்த பகற்காலமும் ஒழிவின்றி என்னைப் பெரியவனாக நினைத்து விரும்பி என்னை விட்டு நீங்காதவன் ஆகின்றான்.
 
உரை:2
 
வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்