விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயன் என் நெஞ்சின் உள்ளான்*  மற்றும் எவர்க்கும் அதுவே,* 
    காயமும் சீவனும் தானே*  காலும் எரியும் அவனே,*
    சேயன் அணியன் எவர்க்கும்*  சிந்தைக்கும் கோசரம் அல்லன்,* 
    தூயன் துயக்கன் மயக்கன்*  என்னுடைத் தோளிணையானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயன் - ஆச்சரியனான எம்பெருமான்
என் நெஞ்சில் உள்ளான்n - எனது நெஞ்சில் இருக்கின்றான்;
மற்றும் யவர்க்கும்n - வேறு யாருக்கேனும்
அஃதே - அப்படியிருப்பதுண்டோ? (இல்லை;)
காயமும் - உடம்பும்

விளக்க உரை

ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன் என் நெஞ்சிலே தங்கியிருக்கிறான்; இது என்ன சேராச்சேர்த்தி? இதனை வேறு எவரேனும் பெற்றார் உளரோ? எல்லா உடல்களும் எல்லா உயிர்களும் தானேயாவன்; காற்று நெருப்பு முதலான ஐம்பெரும்பூதங்களும் அவனேயாவன்! தன் முயற்சியால் காண இருப்பார்க்கு அண்மையில் இருப்பவன்; எத்துணைப் பெரிய ஞானமுடையார்க்கும் சிந்தையால் நினைப்பதற்கும் ஒண்ணாதவன்; யசோதை முதலானவர்கட்குப் பரம்பொருள் என்ற வாசனையும் இல்லாத தூய எளிமையினையுடையவன்; என்னோடு கலந்தவன் ஆன இறைவன் என் தோள்களில் இருக்கின்றவன் ஆனான்.

English Translation

The Lord in my bosom is the body and spirit of all, pure enhanting and deceitful; wind and fire too are him. Lord afar and Lord near, whom none can reach through, he has ascended my shoulders; who can know this wonder?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்