விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
    அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*
    மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
    உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு - வண்டுகள்
குடைந்து - உட்புகுந்து
உண்ணும் துழாய் - மதுவுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையை
முடியானை - திருமுடியிலணிந்த பெருமானை
அடைந்த - பணிந்த

விளக்க உரை

 உரை:1

வண்டுகள் உள்ளே சென்று தேனை உண்ணும் படியான திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடையவனைப் பற்றுக்கோடாக அடைந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர், செறிந்த சொற்களால் தொடுத்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் நோய்களைத் நம் நிலை கெட்டு ஓடும்படி செய்யும்.

உரை:2

இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது. மதுவைப் பருக வேணுமென்று இழிந்த வண்டுகளானவை பெருக்கடலிலே விழிந்தாற்போலே உள்ளேயுள்ள இடங்கொண்டு புஜிக்கும்படியாக மதுவெள்ளம் நிறைந்த திருத்துழாய்மாலையையணிந்த திருவபிஷேகத்தையுடையனான எம்பெருமானைபடி பணிந்த நம்மாழ்வார் அருளிச்செய்த சொற்பொழிவு வாய்ந்த இத்திருவாய்மொழிதானே நோய்களை உடைந்தோடும்படிபண்ணும் என்றதாயிற்று.

English Translation

This decad of the thousand sweet songs by kurugur satakopan, on attaining the Lord who wears the nectared Tulasi wreath humming with bees, provided a cure for sickness and disease.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்