விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அகலில் அகலும்*  அணுகில் அணுகும்,* 
    புகலும் அரியன்*  பொரு அல்லன் எம்மான்,*
    நிகர் இல் அவன் புகழ்*  பாடி இளைப்பு இலம்,* 
    பகலும் இரவும்*  படிந்து குடைந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகலில் - (தன் பக்கலில் அற்பபலன்களைப் பெற்றுக்கொண்டு சிலர்) பிரிந்துபோனால் (அவர்கள் விஷயத்தில்)
அகலும் - வருத்தத்தோடே பிரிந்திருப்பவனும்
அணுகில் - (சிலர் அநந்யப்ரயோஜநராய்) விடமாட்டாதேயிருந்தால்
அணுகும்  -  (அவர்களோடு) ஒரு நீரா கக்கலக்குமவனும்
புகலும் அரியன் - (பிரதிகூலர்க்கு) அணுகவுமொண்ணாதவனும்

விளக்க உரை

உயிர்கள் அகன்று போக நினைப்பின், தானும் அகன்றே நிற்பன்; தன்னைச் சாரின், தானும் சார்ந்தே நிற்பன்; பகைவர்கள் கிட்டுதற்கும் அரியன்; அடியார்கள் தன்னைச் சார்கின்ற காலத்து ஒரு விதத் தடையும் இல்லாதவன்: இத்தன்மைகளால் எனக்குத் தலைவனாய் ஒப்பு இல்லாதவனாய் இருக்கின்ற இறைவனுடைய புகழ்களில், பகலும் இரவும் படிந்து குடைந்து, அவற்றைப் பாடிக் கொண்டு, பிரிவு இன்றியே இருப்போம்.

English Translation

My Lord is one who leaves if left, stays if restrained, My Lord is hard to reach, my Lord is easy to reach. Let using and praise his infinite glory, and enjoy his union, ceaselessly, night and day.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்