விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*
    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீது அவம் இன்றி உரைத்த - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லையென்பதை யெடுத்துரைத்த
ஏதம் இல் ஆயிரத்து - வழுவற்ற இத்திருவாய் மொழியாயிரத்தில்
இ பத்து - இப் பத்துப்பாசுரஙக்ளையும்
ஓத வல்லார் - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள்
பிறவார் - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்

விளக்க உரை

உரை:1

ஸ்ரீசடகோபராலே, திருமகள் கணவனிடத்தில் தீதும் அவமும் இல்லாத தன்மையை எடுத்து உரைக்கப்பட்ட குற்றம் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள். இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள், மீண்டும் வந்து இவ்வுலகிற்பிறக்க மாட்டார்கள்,’ என்பதாம்.

உரை:2

இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது. இப்பாட்டில், தீது அவம் ஏதம் என மூன்று சொற்கள் உள்ளன; குற்றம் என்பதே மூன்றுக்கும் பொருள். மூன்று விஷயங்களுக்குக் குற்றமில்லாமை சொல்லப்படுகினறது; அதாவது- கவிபாடுகிற தமக்கும் பாட்டுண்கிற எமபெருமானுக்கும் இக்கவிகளுக்குஞம் ஒரு தீங்குமில்லாதபடி மாதவன் பாற் சடகோபனுரைத்த ஆயிரம் என்பதாக. ப்ராமாணமாகிய இத் திருவாய்மொழியும் ப்ரமேயனான எம்பெருமானும் ப்ரமாதாவான ஆழ்வார் தாமும் குற்றமற்றிருக்கின்றமையைச் சொன்னவாறு. இது ஆறாயிரப்படியில் பிள்ளான் அருளிய நிர்வாஹம்.

English Translation

This decad of the faultless thousand by pure-hearted Satakopan addressing the perfect Madava secures freedom from rebirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்