விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்கை கொளாமை இலாதான்*  எள்கல் இராகம் இலாதான்*
    விள்கை விள்ளாமை விரும்பி*   உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள்கை - குணம்பார்த்துக் கொள்ளுதலும்
கொளாமை - குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும்
இலாதான் - இல்லாதவனாய்
எள்கல் - கைவிடுகைக்கு அடியான மனநெகிழ்ச்சியும்
இராகம் - கைக்கொள்ளுதற்கு அடியான ஆசையும்

விளக்க உரை

குணம் பார்த்துக் கொள்ளுகையும் குணம் இன்மையைப் பார்த்துக் கை விடுகையும் இல்லாதவன்; கைவிடுகைக்குக் காரணமான வெறுப்பும் கைக்கொள்ளுகைக்குக் காரணமான விருப்பும் இல்லாதவன்; வேறு பலன்களைக் கொண்டு தன்னை விட்டு நீங்குகையையும் வேறு பலனை விரும்பாதவர்களாய்த் தன்னை நீங்காது ஒழிகையையும் விரும்பிப் பார்த்து, உள் கலந்தார்க்கு ஒப்பற்ற அமிர்தம் ஆவான்.

English Translation

The Lord is neidier attracted, not repelled, displays neither hatred nor friendship. Pleased by abstinence and steady devotion, he is ambrosia to the devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்