விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 
    கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
    செடி ஆர் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 
    அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறிய ஞானத்தன் அற்ப ஞானத்தையுடையவனாகிய
அடியேன் நான்
காண்பான் காணும்பொருட்டு
அலற்றுவன்கூவுகின்றேனே!
இதனில் மிக்கு இதனிலும் மேற்பட்டு

விளக்க உரை

 ‘எத்துணை மேம்பட்ட ஞான முடையவர்களும் தமது முயற்சியால் காணும் அன்று அறிதற்கு அரியவனும், வாசனை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை அணிந்தவனும் கண்ணபிரானும், தன்னையடைந்த அடியார்கட்கு நோய் பொருந்திய சரீர சம்பந்தத்தை நீக்குகின்ற திருமகள் கேள்வனும் ஆன எம்பெருமானை நினைந்து, மிகச் சிறிய அறிவினையுடைய யான், அடியேன் என்று அலற்றுவன்; காண்பதற்கு அலற்றுவன்; இதைக்காட்டிலும் மேம்பட்ட அறிவுண்மை ஒன்று உளதோ?’ என்கிறார்.

English Translation

My Lord, Tirumal, wearing the fragrant Tulasi garland! My Krishna, you release devotees from weed-like mortal bondage.Alas! when even great minds fall to understand him, I, of lowly intellect, weep to see him; can there be a grater folly than this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்