விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து*  கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
    அருங்கல உருவின் ஆயர் பெருமான்*  அவனொருவன் குழல் ஊதின போது* 
    மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*  மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்* 
    இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருங்கண் - கறுத்தகண்களையுடைய;
தோகை - தோகைகளையுடைய;
மயில் பீலி - மயில்களின் இறகுகளை;
அணிந்து - (திருமுடி மேல்) அணிந்து கொண்டு;
நன்கு கட்டி உடுத்த - நன்றாக அழுந்தச் சாத்தின;

விளக்க உரை

கண்ணபிரான் குழலூதும்போது அறிவுக்கு யோக்கியதையேயில்லாத மரங்கள் செய்தவைகளை விரித்துரைக்கின்றார். பின்னடிகளால் கண்ணபிரான் குழலூதிக்கொண்டு நிற்கும் பக்கங்கள் பல உண்டு; அவற்றுள் ஒருபக்கத்தில் மகரந்தவர்ஷத்தைப்பண்ணும், மற்ற பக்கத்தில் புஷ்பவர்ஷத்தைப்பண்ணும், வெறொரு பக்கத்தில் கிளைகளைத் தாழ்த்தி நிழலைவிளைக்கும்; தம்மிலேதாம் உருகியும் நிற்கும்; எமக்கருள் செய்யவேணுமென்று அஞ்சலி பண்ணுவதுபோலக் கொம்புகளைக் கூப்பாநிற்கும்; இவ்வாறாக மரங்கள் கண்ணபிரான் திறந்து வழிபட்டபடியே யான் என்னென்று கூறுவேன் என்கிறார் பாயும், வீழும், தாழும் என்ற முற்றுக்களுக்கு, பாய்ச்சும், வீழ்த்தும் தாழ்த்தும் என்று பிறவினைப் பொருள்கள்வதிற் குறையொன்றுமில்லையென்க. இவ்வினைகளையெல்லாம் மரங்களுடையனவாக உரைத்தலிலுள்ள சுவையை நுண்ணிதினுணர்க.

English Translation

The beautiful cowherd Lord is adorned with peacock feathers having dark centre spots, and many jewels over his properly-worn yellow vestmerts. When he played his flute, the trees stood enchanted, and rained streams of nectar, poured flowers, and bent their upper branches in every which way the stood. Oh, the things they did in supplication.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்