விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்வயிறுஆர விழுங்க,* கொழுங்கயல்கண்-
    மன்னு மடவோர்கள் பற்றிஓர் வான்கயிற்றால்*
    பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,*
    அன்னதுஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்*
    துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,*
    முன்இருந்து முற்றதான் துற்றிய தெற்றெனவும்*
    மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்த்,*
    தன்னை இகழ்ந்துஉரைப்ப தான்முனநாள் சென்றதுவும்,*
    மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,*
    கொல்நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம்ஆடி,*
    என்இவன் என்னப்படுகின்ற ஈடறவும்,*
    தென்இலங்கை ஆட்டி அரக்கர் குலப்பாவை,*
    மன்னன் இராவணன்தன் நல்தங்கை,*  -வாள்எயிற்றுத்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் வயிறு ஆர தான் விழுங்க - தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில்
கொழு கயல் கண்மன்னு மடவோர்கள் - நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர்
பற்றி - பிடித்துக்கொண்டு
ஓர் வான் கயிற்றால் - ஒரு குறுங்கயிற்றால்
உரலோடு - உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)

விளக்க உரை

இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள். பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு. “தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க. வான்கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும். கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்